இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் டிசம்பர் 6,7,8 நடைப்பெற்றது.
இந்த விருது நிகழ்வோடு வேளாண் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது.
2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லூனர்கள் பாரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read more: ஏசி ரூம்- தினமும் கடுகு எண்ணெய் மசாஜ்: ராஜ வாழ்க்கை வாழும் கோலு-2 முர்ரா எருமை
மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் MFOI 2023 விருது விழாவில் பில்லினியர் விருது ( Richest farmer of India- RFOI) கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுக்கா, குண்டமானட்டா கிராமத்தைச் சேர்ந்த ஏ.வி.ரத்னம்மா, மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ராஜாராம் திரிபாதிக்கும் வழங்கப்பட்டது. கிரிஷி ஜாக்ரான் மற்றும் APEXBRASIL நிதியுதவியுடன், இவர்கள் பிரேசிலுக்கு 7 நாள் பயணிக்கும் அரிய வாய்ப்பினையும் பெற்றனர்.
MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்ப காத்திருக்கும் MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தையும், மத்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
MFOI-2024: விருதுக்கு விண்ணப்பிக்க இதனை க்ளிக் செய்க
Read more:
PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!
Share your comments