வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையில் சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance – AMB) பராமரிக்க வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை வழங்கினாலும், அடிப்படை வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி இல்லை. ஆம் ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு தனித்துவமாக மாதாந்திர இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். இனி தேவையில்லாமல் அபராத தொகையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மினிமம் பேலன்ஸ் (Minimum Balance)
HDFC வங்கி
நகரப்புறங்கள் மற்றும் பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் மாதாந்திர இருப்பை வைத்திருக்க வேண்டும். அரை நகர்ப்புறங்களில் குறைந்தபட்சம் மாதாந்திர உச்சவரம்பு ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 2,500 மினிமம் பேலன்ஸை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி நிர்வாகம் அபராதம் விதிக்கும்.
பஞ்சாய் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாய் நேஷனல் வங்கியில் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் கணக்குகளைத் துவங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் காலாண்டு நிலுவைத்தொகையாக ரூ. 20 ஆயிரம் தொகை வரை பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். பேருராட்சிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சமாக ரூ. 1000 ஆயிரம் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ. 500 வரை மினிமம் பேலன்ஸை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி நிர்வாகம் அபராதம் விதிக்கும்.
ஐசிஐசிஐ (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மெட்ரோ மற்றும நகர்ப்புற பகுதியாக இருந்தால் மாதாந்திர குறைந்தபட்சத் தொகையாக ரூ. 10 ஆயிரமும், பேரூராட்சிகளில் இருப்பவர்கள் ரூ. 5000 மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வரை மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்க வேண்டும்.
பேங்க் ஆஃப் பரோடா (BoB)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக ரூ. 2 ஆயிரம் மாதாந்திர இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்.
எனவே இனிமேலாவது நீங்கள் எந்த வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவங்கியிருக்கிறீர்களோ? அந்த வங்கியில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் தேவையில்லாத அபராதத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்காது.
மேலும் படிக்க
PM Kisan நிதி 6,000 ரூபாய் தேவையில்லையா? வரவிருக்கும் மத்திய அரசின் புதிய அம்சம்!
Share your comments