அலைபேசிக்கு பரிசு பெட்டகம், போனஸ் கிடைத்துள்ளதாக ஆசையை துாண்டி குறுஞ்செய்தி அனுப்பி நுாதன முறையில் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி செய்யும் கும்பல் அதிகரிப்பதால், விழிப்புணர்வுடன் இருந்தாலும் சில நேரங்களில் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழப்பதும் தொடர்கிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் வியாபாரம், வங்கிக்கடன் என அனைத்திலும் பணம் கையில் புழங்குவதை காட்டிலும் இணையவழி பணம் பரிமாற்றம் அதிகமாகி வருகிறது. அதற்கேற்றார் போல் பல நிறுவனங்களும் க்யூ ஆர் கோடு செயலிகள் என பல்வேறு வகைகளில் பணம் பரிமாற்றம் செய்ய அலைபேசி செயலிகளை உருவாக்கி வருகின்றன. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது போன் பீ, கூகுள் பே, பே டிஎம் போன்ற செயலிகள் தான். தற்போது இதன் வாயிலாகவும் மோசடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது.
குறுஞ்செய்தி (Message)
அலைபேசியில் குறுஞ்செய்தி, இணைய லிங்க் வருவதும் அதில் உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது, பண பரிவர்த்தனை செய்ததற்காக கூடுதல் போனஸ் தொகை கிடைத்துள்ளது என குறிப்பிபடபடுகிறது. யோசிக்காமல் அந்த லிங்கை தொட்டவுடன் நேரடியாக இணையத்துக்குள் செல்கிறது. அங்கு ஒரு பரிசு பெட்டகம் போல் உள்ள ஒன்றை ஸ்கிராட்ச் செய்யச் சொல்கிறது. பின்னர் உங்களுக்கு 2000 முதல் 5000 வரை பரிசுதொகை கிடைத்துள்ளதாக தகவல் வருகிறது. அதனைக் கிளிக் செய்தால் நேரடியாக போன் பே செயலிக்குள் செல்கிறது. கடவுச்சொல்லை பதிவு செய்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் ஆகிவிடுகிறது. இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வுகள் வழங்கினாலும் பலரும் ஏமாந்து நவீன மோசடியால் பாதிக்கின்றனர்.
வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி போலீசில் புகார் கூறாமல் மறைத்து விடுகின்றனர். இது மோசடி கும்பலுக்கு சாதகமாக மேலும் மோசடியில் ஈடுபடுகின்றனர். பதிக்கும் பலருக்கு இது தொடர்பாக எங்கு புகார் தெரிவிப்பது என்பதே தெரியாமல் உள்ளனர்.
பணப்பரிவர்த்தனை விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் நகர், கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ.டி.பி., எண்ணை பகிராதீங்க அலைபேசிக்கு வரும் லிங்க் ,தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்தால் அதைத் திறக்க கூடாது . வங்கி சம்பந்தமான ஓ.டி.பி., எண்களை யாருக்கும் பகிர கூடாது. அலைபேசியில் லோன் அப்ளிகேஷன் பல வருகிறது. அதில் அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. அவற்றை தவிர்ப்பது நல்லது. ஆன்லைன் பண மோசடி நடந்தால் 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments