குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சார்ந்த முன்னாள் ஊர் தலைவர் தனது வருங்கால மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக 500 ருபாய் நோட்டுகளை மாடியிலிருந்து வீசியுள்ளார்.
அங்கு பணமழை பொழிந்த காரணத்தினால் அப்பணத்தை எடுக்க மக்கள் பலர் அங்கு கூடினர். இதனால் அப்பகுதியில் கடும் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு சராசரி இந்திய குடிமகனின் வருமானம் எற குறைய 300 ருபாய் தான். இதுபோன்ற நிலையில் உள்ள மக்கள் பணமழை பொழிவதை கண்டால் அவர்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்? ஆம், இதுபோன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.
கேக்ரி தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்தில் ஒரு திருமண விழாவில் 500 ரூபாய் நோட்டுகளின் பணமழை பொழிந்திருக்கிறது. இதனை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் கரீம் யாதவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மருமகனை ஊருக்குள் வரவேற்கும் விதமாக அவர் இவ்வாறு பணத்தை காற்றில் வீசி எறிந்துள்ளார்.
நம் நாட்டின் வட மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் அங்குள்ள மக்களுக்கான வருமானம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆண்டில் 100 நாட்கள் இவர்களுக்கு வேலை இருந்தால் அதுவே அதிகம். எனவே வருமான பற்றாக்குறையால் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பணமழையில் தங்களுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டாவது கிடைக்காதா என பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக அந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் கிராமத்தில் நுழைந்தவுடன் ஒரு உயரமான வீட்டின் மாடியின் மீது ஏறிய கரீம் யாதவ் தனது மருமகன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தி பணத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்.
மக்கள் இந்த பணத்தை பிடிக்க முயன்றதில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது இதில் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக பரவி வருகிறது.
பணத்தை காற்றில் பறக்கவிடும் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோல ஏற்கெனவே பலமுறை நடந்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்னர் இதேபோல இளைஞர் ஒருவர், மேம்பாலத்தில் நின்றுகொண்டு பணத்தை வீசியெறிந்துள்ளார்.
பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட்டை ஒட்டியுள்ள மேம்பாலத்திற்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தியுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கைப்பையிலிருந்து 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீசியெறிந்துள்ளார்.
இந்த நபர் ஒரு கட்டத்தில் பாலத்திற்கு கீழேயும் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்துள்ளார். வானத்திலிருந்து பணமழை பொழிவதை பார்த்த மக்கள் ஓடிச்சென்று அதனை சேகரிக்க தொடங்கினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
வாழைப்பழத்தோலின் அசரவைக்கும் நன்மைகள்
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 35 % ரூ.75 இலட்சம் வரை மானியம்
Share your comments