நம்மாழ்வாரின் கூற்றில், விவசாயம் சார்ந்த மக்களாகட்டும், அல்லது விவசாயம் பிடிக்கும் என்று கூறும் மக்களாகட்டும், அனைவருக்கும் அவரின் தகவல்கள் பிடிக்கும். அந்த வகையில் தற்போது, அவர் கூறிய கூற்றைப் பற்றி பார்க்கலாம்.
இந்த விடுகதை, ஆன, உன படிக்காத காலத்தில், ஒரு பெண் ஏற்றிய விடுகதையாகும். காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?. அதற்கு விடை: காயான தேங்காயை துறுவினால், அதை நாம் தேங்காய் பூ என்றே அழைக்கின்றோம் அல்லவா. ஆம், காயான பிறகு பூவாவது என்ற விடுகதையின் முதல் கேள்விக்கு, இதுவே பதிலாகும். இலக்கியத்தின், அழகு இவ்வாறான கூற்றுகளில் வெளிப்படுகிறது.
அவ்வாறே விடுகதையில் மறைந்திருக்கும் அடுத்த கேள்வி, அதாவது பழமான பிறகு காயாவது எது? இதற்கான பதில் என்னவென்றால்: நாம் எலுமிச்சையை, எலுமிச்சை காய் என்று அழைபதில்லை எலுமிச்சைப் பழம் என்கின்றோம். மேலும் எலுமிச்சை பழத்தை வெட்டி உப்பு, மசாலா கலந்து, வெயிலில் உரவைத்து எடுத்தால், அது உருகாய் என கூறுவோம் அல்லவா. ஆம் எலுமிச்சைப் பழம் உருகாயாக மாறுவதைதான், விடுகதையில் பழமான பிறகு காயாவது எது என கேட்டக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலக்கியத்தில் நிறைய அரிய தகவல்கள் மறைந்திருக்கின்றனர். அதில் சில, விடுகதைகளாகவோ அல்லது இலக்கிய பாட்டுகளாகவோ, கவிதைகளாகவோ பிரதிப்பலிக்கினறன. இதில் நம்மாழ்வாரின், இந்த கூற்று நம்மை நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
தமிழகம்: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
Share your comments