1. Blogs

தொழில் முனைவோருக்கு புதிய செயலி: ICICI வங்கி அசத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
New Application for Entrepreneurs

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (ICICI Bank) அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே முதல்முறையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இதர வங்கிகளின் தொழில் முனைவோர்களுக்காக, இந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி (ICICI Bank)

தொழில்துறை சார்ந்த தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. தொழில் முனைவோர் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும், முழுமையான இணையதளமாக இது இருக்கும். மேம்படுத்தப்பட்ட ‘இன்ஸ்டாபிஸ்’ புதிய செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை பெறலாம். தொழில் முனைவோருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் (ICICI Bank) இந்த செயலி, அதிகப் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் வர்த்தகத்தை எளிதாக்கிக் கொள்ள முடியும்.

விரைவாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வர்த்தகத்தை தொடங்குங்கள். தெரியாத நபர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க

இணையத்தில் வைரல்: லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்!

இனி சார்பதிவாளர் அலுவலகங்கள் இந்த நாளிலும இயங்கும்!

English Summary: New Application for Entrepreneurs: ICICI Bank Stunning! Published on: 30 April 2022, 11:42 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.