1. Blogs

குடும்ப பென்சனில் புதிய வசதி: இனி இவர்களுக்கும் பென்சன் கிடைக்கும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Family pension scheme

மத்திய அரசு ஊழியர்களுக்கு (பழைய பென்ஷன் திட்டத்தின்படி) பென்ஷன், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் குடும்ப பென்ஷன் முதலானவற்றை வழங்குவதற்கான, `மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிமுறைகள் 1972’ சீரமைக்கப்பட்டு-மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021 (central civil services (pension) rules 2021) தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது.

குடும்ப பென்சன் (Family Pension)

பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷன் விதிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய துணை விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்கத்தக்க பல்வேறு அம்சங்களில் குடும்ப பென்ஷன் பற்றிய விதிமுறை சீரமைப்பு மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கவனத்துக்கு உரியதாக அமைந்துள்ளது. அவற்றைப் பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர் படிவம் - 4

பணியில் சேர்ந்தவுடன் தன் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டியது படிவம் - 4. வரிசை எண், பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் (விரும்பினால் தெரிவிக்கலாம்) குடும்ப உறுப்பினரின் உறவு முறை, மணமானவரா ஆகாதவரா, குறிப்பு ஆகிய விவரங்களுடன் கூடிய இப்படிவத்தில் குடும்ப பென்ஷன் பெறத் தகுதியுடையவரா, தகுதி இல்லாதவரா என்ற பாகுபாடு பார்க்காமல் கீழ்க்கண்டவர்களின் பெயர்-விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

  • ஊழியர் ஆண் எனில் மனைவி, பெண் ஊழியர் எனில் கணவரின் பெயர் (சட்டப் பூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள மனைவி/கணவர் உட்பட).
  • மகன், மகள் (இறந்துபோன கணவர் அல்லது மனைவிக்கு பிறந்தவர்கள், விவகாரத்தான கணவர் - மனைவி மூலமான பிள்ளைகள் தத்தெடுத்த பிள்ளைகள், சட்டபூர்வமல்லாத முறையில் பிறந்த பிள்ளகைள் உட்பட)
  • பெற்றோர்.
  • மாற்றுத்திறனாளியாக உள்ள (தாயையோ, தந்தையையோ பொதுவாகக் கொண்ட) சகோதர - சகோதரிகள் ஆகிய அனைவரது பெயர் விவரங்களை எழுதி தேதியுடன் கூடிய கையொப்பமிட்டு தனது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பித்து விட வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பித்த பிறகு ஏற்படும் பிறப்பு, இறப்பு, விவாகரத்து, மறுமணம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை அவ்வப்போது அலுவலகத் தலைவருக்கு தெரிவித்து அலுவலகத் தலைவரின் தேதியுடன்கூடிய கையொப்பம் பெற வேண்டும்.

சிறப்பம்சம் என்னவென்றால், பணியில் சேர்ந்தபோது சமர்ப்பித்த (Original Form-4) படிவத்தில்தான், மேற்கண்ட பிறப்பு, இறப்பு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுமே தவிர, (முன்பு போல்) ஒவ்வொரு முறையும் புதிய படிவம் சமர்ப்பிக்கக் கூடாது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!

EPFO அமைப்பிற்கு 35 சட்ட நிபுணர்கள்: விரைவில் நியமனம்!

English Summary: New facility in family pension: Now they will get pension too! Published on: 17 November 2022, 09:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.