நீங்கள் Post Officeல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு சிலப் புதிய வசதிகளை மத்திய அரசு அளிக்க முன்வந்துள்ளது. எனவே அதனைப் பயன்படுத்திக்கொள்வது குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னணு பரிவர்த்தனை
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்போரும் இனி மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். அதாவது, தபால் அலுவலக கணக்குதாரர்களும் நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகிய மின்னணு பணப் பரிவர்த்தனை வசதிகளை பயன்படுத்தலாம் என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
ஆர்டிஜிஎஸ்
இதன்படி மே 18ஆம் தேதி முதல் நெஃப்ட் பரிவர்த்தனை வசதியையும், மே 31ஆம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை வசதியையும் பயன்படுத்த முடியும் என தபால் துறை தெரிவித்துள்ளது. இவ்இரு வசதிகளால் தபால் அலுவலக சேமிப்பு கணக்குதாரர்கள் என்னென்ன செய்ய முடியும்?
பணம் அனுப்ப
தபால் அலுவலக சேமிப்புக் கணக்குதாரர்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்ப முடியும். அதேபோல, மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் வாயிலாக தபால் அலுவலக சேமிப்பு கணக்குக்கு பணம் அனுப்ப முடியும்.இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தபால் அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டும்படியும் தபால் துறை உத்தரவிட்டுள்ளது.
NEFT
NEFT என்பது National Electronic Funds Transfer ஆகும். RTGS என்பது Real Time Gross Settlement ஆகும். இரண்டுமே மின்னணு பணப் பரிவர்த்தனை முறையாகும். ஆண்டு முழுவதும் எல்லா நாட்களும் எல்லா நேரமும் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் வாயிலாக பணம் அனுப்ப முடியும். விடுமுறை நாட்களிலும் எந்த தடையும் இல்லாமல் பணம் அனுப்பலாம்.
மேலும் படிக்க...
Share your comments