1. Blogs

same sex marriage: தன்பாலின திருமணத்திற்கான அங்கீகாரம்- கைவிட்ட உச்சநீதிமன்றம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
same sex marriage

தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தன்பாலின திருமணத்திற்கு தங்களால் அனுமதி வழங்க இயலாது எனவும், இதற்கான அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

1860 இல் இந்தியாவின் பிரிட்டிஷ் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமண உறவு குற்றமாக கருதப்பட்டது. திருமண உரிமைகள் இரு பாலின ஜோடிகளுக்கு மட்டுமே எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த சட்டமே தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ஒரே பாலின உறவுமுறையை குற்றமாக்கிய காலனித்துவ காலச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் அதே நேரத்தில், ஒரே தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

சட்ட அங்கீகாரம் வேண்டி தொடரப்பட்ட வழக்கானது அரசியல் சாசன அமர்வுக்கு முன் வந்தது. தற்போதைய ஒன்றிய அரசு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடாது என தீவிரமாக வாதாடியது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மற்றும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் QUEER ஜோடிகள் குழந்தையை தத்தெடுக்க உரிமை உண்டு என தீர்பளித்த நிலையில், நீதிபதிகள் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்ஹா ஆகியோர் திருமணம் ஆகாத மற்றும் QUEER ஜோடிகள் தத்தெடுக்கும் உரிமையினை மறுத்து தீர்ப்பளித்துள்ளனர்.

3:2 என்ற விகிதாச்சாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்கவும் அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தனது தீர்ப்பில் தன்பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கான சிறப்பு அழைப்பு எண் வசதிகளை ஏற்படுத்தவும், இவர்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற பாலின மக்களைப் போலவே தன் பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் சமமாக வாழ அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. அதன்படி, அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற முடிவினை எடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரமும் உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

எதிர்ப்பார்த்த தீர்ப்பு வராத காரணத்தினால் QUEER ஜோடிகள், LGBTQ ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், விரைவில் தங்களையும், தங்கள் உறவு முறையினையும் இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொண்டு எங்களுக்கான உரிமை நிலைநாட்டப்படும் என நம்பிக்கையுடன் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் காண்க:

PVR INOX Passport: வெறும் ரூ.699-க்கு மாசம் 10 படம் பார்க்கலாமா?

பைக் சந்தையில் அதிரடி அம்சங்களுடன் களமிறங்கியது Triumph Scrambler 400 X

English Summary: No fundamental right of same sex marriage verdict by Supreme court Published on: 17 October 2023, 03:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.