ஆதார் அட்டை மூலமாக ரூ.4.78 லட்சம் கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போன்று செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு PIB விளக்கம் அளித்துள்ளதை பற்றி பார்ப்போம்.
ஆதார் அட்டை (Aadhar Card)
இந்தியாவில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயமானதாகும். அத்துடன் வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் மட்டும் இருந்தால் போதும் ரூ.4.78 லட்சம் வரை கடன் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
கடன் கிடையாது (No Loan)
இது தொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு PIB Fact Check விளக்கம் அளித்துள்ளதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக பரவி வரும் செய்தி போலியானது என்று தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் ஆதார் கார்டுக்கு கடன் வழங்குவது குறித்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் வங்கிகளில் ஆதார் கார்டு மட்டும் வைத்திருந்தால் கடன் கிடைக்காது. இதற்கு வாடிக்கையாளரின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவையும் தேவைப்படும். அதனால் யாரும் இந்த தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் வங்கி எண், ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் நம்பி பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க
விவசாயிகள் கவனத்திற்கு: விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறும் வழி இதோ!
EPFO சந்தாதாரர்கள் கடகட உயர்வு: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளா?
Share your comments