1. Blogs

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் (Non-subsidised cooking gas LPG cylinder) விலை சென்னையில் ரூ.4.00 வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்கள் சந்தை விலையில் வினியோகிக்கப்படுகிறது.

இதன் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாதம்தோறும் இந்த வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரியவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

சமையல் சிலிண்டர் விலை உயர்வு (LPG Rate increased)

அதன் படி, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, சென்னையில் சிலிண்டருக்கு ரூ.4 அதிகரித்துள்ளது, ரூ.606.50 இருந்து ரூ.610.50 ஆக உயர்ந்தது. அதுபோல், டெல்லியில் 1 ரூபாய் அதிகரித்து ரூ.594 ஆனது. கொல்கத்தாவில் ரூ.4.50 உயர்ந்து ரூ.620.50 ஆனது. மும்பையில் ரூ.3.50 உயர்ந்து ரூ.594 ஆனது.

அதுபோல், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வினியோகிக்கப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 1 ரூபாய் அதிகரித்து, ரூ.1,255 ஆனது. கொல்கத்தாவில் 4 ரூபாயும், மும்பையில் 3 ரூபாயும் உயர்ந்தது. டெல்லியில் மட்டும் ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,923 அதிகரித்து, ரூ.41,993 ஆனது. அதாவது, 7.48 சதவீதம் விலை உயர்ந்தது. ஒரே மாதத்தில் இது 3-வது விலை உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க... 

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்! -உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்!

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் மாயம்!

வெட்டுக்கிளிகளை அகற்றும் பணியில் ஹெலிகாப்டர்கள்!

English Summary: Non-subsidised cooking gas LPG cylinder prices increased Published on: 02 July 2020, 09:14 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.