1. Blogs

விவசாயிகளே- MFOI விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு !

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

MFOI Award

க்ரிஷி ஜாக்ரான் மற்றும் Agriculture world இணைந்து மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள நிலையில், விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் என வேளாண் துறை சார்ந்து இயங்குபவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI விருது வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி எப்போது?

விருதுக்கான அறிவிப்பு வந்தது முதலே இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற நவம்பர் 11 ஆம் தேதியுடன் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம், மற்றவரையும் பரிந்துரை செய்யலாம்.

விருதுக்கான பிரிவுகள்: MFOI நிகழ்வில் மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ளது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க இயலும். பிரிவுகளின் விவரம் பின்வருமாறு-

பிரிவு - A:

  • தோட்டக்கலை விவசாயத்தில் இந்தியாவின் மில்லினியர்
  • தாவர வளர்ப்பில் இந்தியாவின் மில்லினியர்
  • மசாலா பயிர் விவசாயத்தில் இந்தியாவின் மில்லினியர்
  • பால்வள உற்பத்தியில் இந்தியாவின் மில்லினியர்
  • கோழி வளர்ப்பில் இந்தியாவின் மில்லினியர்
  • சிறுதானிய விவசாயிகளில் இந்தியாவின் மில்லினியர்
  • மில்லினியர் வெட்டிவேர் பார்மர் ஆஃப் இந்தியா
  • இந்தியாவின் மில்லினியர் பயிர் விவசாயி
  • இந்தியாவின் மில்லினியர் ஆர்கானிக் விவசாயி
  • இந்தியாவின் மில்லினியர் மீன்பிடி விவசாயி
  • இந்தியாவின் மில்லினியர் தேனீ விவசாயி
  • இந்தியாவின் மில்லினியர் மலர் வளர்ப்பு விவசாயி

பிரிவு-B:

  • பழங்குடியின விவசாயிகளில் இந்தியாவின் மில்லினியர்
  • இந்த ஆண்டின் FPO மில்லினியர்
  • பெண் விவசாயிகளில் இந்தியாவின் மில்லினியர்
  • இந்தியாவின் பணக்கார விவசாயி (RFOI )

விருதுக்கு விண்ணப்பிக்க/பரிந்துரைக்க இந்த லிங்கினை தொடரவும்

MFOI விருது வழங்கும் நோக்கத்தின் மூளையாக விளங்கும் க்ரிஷி ஜாக்ரன் ஊடகத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியருமான எம்.சி. டொமினிக், நாட்டிற்கு உணவளிக்கும் அந்த ‘கௌரவமான கரங்களை’ அங்கீகரிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளார்.

வருகிற டிசம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் டெல்லியில் வைத்து MFOI விருது வழங்கும் விழா நடைப்பெற உள்ளது. இந்நிகழ்வில் 3 நாட்களுக்கான வேளாண் கண்காட்சியும் நடைப்பெற உள்ளது. விவசாயிகள், வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்கள், வேளாண் அறிஞர்கள் பலரும் பங்கேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

புகழ்பெற்ற வேளாண் பல்கலைகழகங்களின் ஆதரவு- உத்வேகம் எடுக்கும் MFOI

English Summary: Notification of Last Date to Apply for MFOI Award

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.