1. Blogs

இனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்! எப்படித் தெரியுமா?

KJ Staff
KJ Staff
Twitter
Credit : Pinterest

இந்தியாவில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் (Social amedias) அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இந்நேரத்தை எல்லாம் நாம் பயனுள்ளதாக மாற்ற ஆன்லைனில் பார்ட் டைம் வேலை தேடுவதுண்டு. அவர்களுக்கெல்லாம் நற்செய்தி ஒன்று உள்ளது. டிவிட்டரில் கணக்கு இருந்தால், அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது டிவிட்டர் (Twitter) நிறுவனம்.

சூப்பர் ஃபாலோ

விர்ச்சுவல் ஆய்வாளர் நிகழ்வில் ‘சூப்பர் ஃபாலோ (Super folloe)’ என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் அறிவித்தது. இது, ட்விட்டர் பயனர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு வழங்கும் பிரத்தியேக ட்வீட் மற்றும் பிற உள்ளடக்கங்களிலிருந்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், உள்ளடக்கப் படைப்பாளருக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு “சமூக அணுகல்,” “ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்” உள்ளிட்ட சந்தாதாரர்களுக்கு (Subscribers) மட்டுமே நன்மைகள் கிடைக்கும். கட்டண சந்தா சேவையில் “பிரத்தியேக உள்ளடக்கம்,” “சந்தாதாரர்க்கான செய்திமடல்கள் மட்டும்” மற்றும் சந்தாதாரர்களுக்கான “ஆதரவாளர் பேட்ஜ்” ஆகியவை அடங்கும். ஆரம்பத்தில், கட்டண சூப்பர் ஃபாலோ அம்சத்தின் விலை குறைவாக இருக்கும். ட்விட்டர் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, சூப்பர் ஃபாலோ சந்தா ஒரு மாத அடிப்படையில் சுமார் ரூ.365 செலுத்துமாறு கேட்கும்.

“சூப்பர் ஃபாலோ போன்ற பார்வையாளர்களின் நிதி வாய்ப்புகளை ஆராய்வது படைப்பாளர்களையும் வெளியீட்டாளர்களையும் தங்கள் பார்வையாளர்களால் நேரடியாக ஆதரிக்க அனுமதிக்கும். மேலும், அவர்களின் பார்வையாளர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்க அவர்களை ஊக்குவிக்கும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, ட்விட்டர் (Twitter) பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தாவை ரத்து செய்வதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள். ட்விட்டர் இந்த அம்சத்தை எப்போது வெளியிடும் என்பது தற்போது தெரியவில்லை. ஆனால், இது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரின் கட்டண சந்தா அம்சம் பரந்த அளவிலான படைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, நிருபர்களுக்கும் உதவும். “சமூகங்கள்” என்று அழைக்கப்படும் ஒரு அம்சத்தைச் சேர்க்கவும் ட்விட்டர் தயாராக உள்ளது. இது ஃபேஸ்புக் குழுக்கள் செயல்படுவதைப் போலவே செயல்படும். பயனர்கள் ஒரு குழுவை உருவாக்க முடியும், அதே ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள் அந்தக் குழுவில் சேர முடியும்.

பாதுகாப்பு முறை

ட்விட்டர் பயனர்கள் விரைவில் “பாதுகாப்பு முறை” அம்சத்தைக் காண்பார்கள். இது தவறான கணக்குகளை தானாகத் தடுக்க அல்லது முடக்க அனுமதிக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்றத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் 2024-க்குள் இரு மடங்காகும்! ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!

English Summary: Now you too can make money through Twitter! How do you know? Published on: 28 February 2021, 06:09 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.