1. Blogs

ஓணம் கொண்டாட்டம் - விமானத்தில் பறக்கும் முறுக்கு, சீடை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Onam Celebration - Flying Muruku, Seedai!

ஓணம் பண்டிகையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு முறுக்கு, சீடை உள்ளிட்டவை விமானத்தில் அனுப்பி வைக்க புக்கிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணெய் பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

உணவுப் பொருட்கள்

இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும், சராசரியாக 3 டன் சரக்குகள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். பொதுவாக, காய்கறிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.

கார்கோ

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கார்கோ பிரிவில் காய்கறிகள், என்ஜினீயரிங் பொருட்கள் மட்டுமே அதிகளவு ஏற்றி செல்லப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, முறுக்கு மாவு, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மிக அதிகளவு புக்கிங் செய்யப்பட்டு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.

முருக்கு மாவுக்கு மவுசு

குறிப்பாக முறுக்கு மாவு ஒவ்வொரு முறையும் 80 கிலோ மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களும் அதிகளவு புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலவரம் ஓணம் பண்டிகை முடியும் வரை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Onam Celebration - Flying Muruku, Seedai! Published on: 15 August 2022, 12:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.