பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்து விட்டது. பல மாதங்களாக நீடிக்கப்பட்டு வந்த கெடு நாள் முடிந்தும் கூட பான் - ஆதார் இணைப்பை செய்யாதவர்கள், சில விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடனே பான் எண் செயல்படாது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இதை மத்திய நேரடி வரிகள் வாரியமே (Central Board of Direct Taxes - CBDT) அதன் சமீபத்திய சுற்றறிக்கையில் உறுதி செய்துளளது.
பான் - ஆதார் இணைப்பு (Pan - Aadhar Linking)
ஒருவேளை கடைசி கெடு நாளாக அறிவிக்கப்பட்ட தேதிக்குள், அதாவது மார்ச் 31, 2023 க்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதற்கு பின் எந்த அபராதமும் இருக்காது; குறிப்பிட்ட நபர்களின் பான் எண் செயலிழந்து போகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.
செயல் இழந்து போன பான் கார்டை நீங்கள் வைத்து இருந்தால், உங்களால் வரிக் கணக்கை (tax return) தாக்கல் செய்ய முடியாமல் போகும், மேலும் நிலுவையில் உள்ள ரிட்டர்ன்கள் மற்றும் ரீஃபண்ட்களையும் (returns and refunds) செயல்படுத்த முடியாது. உடன் அதிக விகிதத்திலான வரி விலக்குகளும் ஆளாவீர்கள்.
மேலும், அனைத்து வகையான பண பரிவர்த்தனைகளுக்கும் மிகவும் முக்கியமான கேஒய்சி (KYC) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், அது செயல் இழந்து போகும் பட்சத்தில், வங்கிகள் மற்றும் பிற பைனான்ஸ் தொடர்புடைய இணையதளங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் வரி செலுத்துவோர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
ரூ.500 அபராதம் (Rs. 500 Fine)
எனவே பான் - ஆதார் இணைப்பது மிகவும் முக்கியமான ஒரு பணியாக கருதப்படுகிறது. ஒருவேளை இன்னமும் நீங்கள் உங்களின் பான் - ஆதாரை இணைக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் செலுத்தி உடனே அந்த வேலையை முடிக்கவும். ஜூன் 30 ஆம் தேதிக்குள் இதை செய்து முடித்தால் ரூ.1000 என்கிற அபாரதத்தில் இருந்து தப்பித்து குறைந்தது ரூ.500 ஐ சேமிக்கலாம்.
மேலும் படிக்க
Share your comments