மகன்தான் பைலட் என்று தெரியாமல் விமானத்தில் பயணம் செய்த பெற்றோருக்கு, மகன் அளித்த இன்ப அதிர்ச்சி சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருந்தது.விமானி அறையில் இருந்து வெளியே வந்து நின்ற மகனைக் கண்டு பெற்றோர், மட்டில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகிழ்ச்சி
பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்கும் மிகப் பெரிய சந்தோஷமே, அவர்கள் தங்கள் தொழிலில் உச்சம் அடைவதுதான். இருப்பினும் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருப்பதில்லை. அப்படி கிடைக்கும் பட்சத்தை அதனை சந்தோஷமாக அனுபவித்துக்கொள்வதே உத்தமம். அப்படியொரு சம்பவம்தான் இது.
விமானப் பயணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு தெரியாது.
இன்ப அதிர்ச்சி
திடீரென விமானி அறையில் இருந்து கமல்குமார் வெளியே வந்து தனது பெற்றோர் முன்பு நின்றார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பார்த்து சிரித்தனர். கமல்குமாரின் தாய் அவரது கையை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் தாய், தந்தையை விமானி அறைக்கு அழைத்து சென்று அங்கு இருவரையும் சிறிது நேரம் அமர வைத்து நெகிழ்ந்தார்.
வீடியோ வெளியீடு
இந்த வீடியோவை கமல்குமார் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருந்தார்.
அதில், நான் பறக்கத் தொடங்கியதில் இருந்து இதற்காக தான் காத்திருந்தேன். இறுதியாக அவர்களுடன் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சிறந்த உணர்வு என்று கூறி உள்ளார். கமல்குமாரின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி உள்ளனர்.
மேலும் படிக்க...
சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகைகள் கிடையாது- மத்திய அரசு திட்டவட்டம்!
ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!
Share your comments