உணவு உண்ணும் போது நிகழும் எதிர்பாராத விபத்துகள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில், தற்போது நிகழ்ந்துள்ள மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயது இளைஞர்
கேரளாவில், இளைஞர் ஒருவர் புரோட்டா சாப்பிட்டபோது, அது எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கி உயிரிழந்தார்.
இடுக்கி மாவட்டம் பூப்பாறை சுண்டல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி. 35 வயதான இவர் அங்குள்ள ஏலத்தோட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட உரத்தை இறக்க உறவினருடன் சென்றிருந்தார்.
நேர்ந்த கொடுமை
அப்போது கட்டப்பனை நகரில் உள்ள ஓட்டலில் வாங்கிய புரோட்டோவை வாகனத்தில் வைத்து அவசர அவசரமாக சாப்பிட்டபோது பாலாஜியின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.அவரை, உடனிருந்த உறவினர் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதாவது தொண்டையில் புரோட்டோ சிக்கி அந்த இளைஞர் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குதான் நாம் சாப்பிடும்போது, எப்போதுமே, அவசரப்படாமல், அதற்கென நேரம் செலவிடு, பொறுமையாக உணவு உண்பது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
மேலும் படிக்க...
Share your comments