1. Blogs

பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension scheme

பென்சன் பெறுவோருக்கு தற்போது பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. நீங்களும் பென்சன் பெறுபவராக இருந்தால் இது உங்களுக்கு நல்ல செய்தி ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உத்தரகாண்ட் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பிறகு அவர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே பணம் கிடைக்கும். இது குறித்த தகவலை உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. இனி அம்மாநில மக்கள் ஓய்வூதியத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

பென்சன் (Pension)

பென்சன் பெறுவோர் இனி நீண்ட வரிசையில் நிற்கவோ அல்லது பென்சனுக்காக காத்திருக்கவோ தேவையில்லை என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்க, மாநில அரசு சார்பில் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.62 லட்சம் பென்சனர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் பர்தன் கூறுகையில், ஏப்ரல் மாத பென்சன் வழங்க மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் இயக்குநர் பன்ஷிதர் திவாரி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சமூக நல பென்சன் திட்டங்களில் பணம் செலுத்த ஒவ்வொரு மாதமும் தேதி நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்து அரசு தேதியையும் நிர்ணயித்தது.

பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஆறு மாதங்களாக பென்சன் கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில், அவர்கள் துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டிய சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்த புகார் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு வந்தது. அதன் பிறகு இப்பிரச்சினை பெரிய அளவில் வெடித்துள்ளது.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

English Summary: Pension money will now be available immediately: State government's new initiative! Published on: 12 May 2023, 02:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.