நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன. அரசின் நிதியுதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு (Ration Card)
ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, தொடர்ந்து 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
அவர்களுக்குப் பதிலாக, தகுதியுடைய பிறர் பயன்பெறும் வகையில் இந்த விதிமுறை வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.
இலவச ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களே தேவைப்படாத குடும்பங்களும் வெறுமனே ரேஷன் கார்டு வைத்திருப்பார்கள். அதேநேரம், தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகிறது. சிலர் ரேஷன் பொருட்களை வாங்கி அதை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய விதிமுறை வகுக்கப்படுகிறது. இதன்படி, இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். தகுதியற்றவர்கள் பயன்பெற முடியாது.
மேலும் படிக்க
Share your comments