மாணவர்கள் மத்தியில் திருக்குறள் கற்பதை ஊக்குவிக்கும் நோக்கில், 20 திருக்குறள் ஒப்பித்தால் 1 லிட்டர் பெட்ரோல் (Petrol) இலவசம் என்று அரவகுறிச்சியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் (Petrol Bunk) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருக்குறளின் அருமையை உணர்ந்து, அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருக்குறளுக்கு இலவசப் பெட்ரோல்!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், நாகம்பள்ளி கிராமம், வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது வள்ளுவர் பெட்ரோல் பங்க் (Valluvar Petrol Bunk). இந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவர்கள் மத்தியில் திருக்குறள் (Thirukural) பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 10 குறளை ஒப்புவித்து சொன்னால் அரை லிட்டரும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக (Free Petrol) வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிர்வாகம் அசத்தலான அறிவிப்பை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தப் போட்டியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என நிர்வாகம் தெரிவித்தது.
மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம்!
பெற்றோருடன் மாணவர்கள் பெட்ரோல் பங்கிற்குச் சென்று திருக்குறளைச் சொல்லி பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கின்றனர். இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு ஊக்கமாகவும் (Encourage), படித்ததை மறக்காமல் இருக்க உதவியாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
"மாணவர்களிடம் தமிழ் வாசிப்பதும், பேசுவதும் குறைந்து வருகிறது. மேலும் மக்களிடையே திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வை (Awarness) ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இலவச பெட்ரோல் திட்டத்தை அறிவித்துள்ளோம்" என திருக்குறள் திட்டம் (Thirukural Project) குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தை மாதம் திருவள்ளுவர் தினம் (Thiruvalluvar Day) முதல் ஏப்ரல் 31 வரை மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும்போது திருக்குறளை கூறினால் போதும். அவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல அவரக்ளது வாகனங்களுக்கு பெட்ரோல் இலவசம் என்று உற்சாகமாக கூறுகிறார் பங்க் உரிமையாளர் (Bunk Owner).
மன நிம்மதி:
அன்புக்கு அம்மா, கண்டிப்பிற்கு அப்பா, நல்வாழ்க்கைக்கு திருக்குறள். ஆகவே தான் திருக்குறளின் தத்துவங்களை இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்வது நல்லது என்றும், தினந்தோறும் திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்குவதில் ஓர் மன நிம்மதி என்றும் உணர்ச்சிப்பொங்க கூறினார் இந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து மதுரையில் பிரபலமாகும் நாய்கள் கண்காட்சி!
Share your comments