தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) வட்டி விகிதம் சமீபத்தில் குறைக்கப்பட்டது தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பேரதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. இதுவரை ஊழியர்களின் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
நிறுவனமும் ஊழியர்கள் கொடுக்கும் தொகைக்கு இணையான தொகையை டெபாசிட் செய்து வந்தது. அதில் ஊழியர்களுக்கு வரி விலக்கு கிடைத்தது. ஆனால் ஏப்ரல் 1ம் தேதி முதல் வருங்கால வைப்பு நிதி ஆணையம் செய்துள்ள மாற்றங்களின் படி, வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பிற்கு வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
EPF விதிகள் (EPF Rules)
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 12 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். புதிய EPF விதிகள் பற்றி சந்தாதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்
- புதிய விதியால் அனைத்து சந்தாதாரர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
- புதிய விதிகளின்படி, ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் சேமிக்கும் முதலீட்டாளர்கள் பிஎஃப் சேமிப்பிற்கான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
- ஊழியர்களால் PF கணக்கில் வரவு வைக்கப்படும் அனைத்து வட்டியும் ஒரு வருடத்தில் 2.5 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும்.
- நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய விதி மாற்றம், அதிக வருங்கால வைப்பு நிதியை டெபாசிட் செய்யும் அளவிற்கு அதிக சம்பளம் பெறுபவர்களை பாதிக்கும் எனக்கூறப்படுகிறது.
- 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு முன்பு வரை, வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லாததாக இருந்தது.
- முதலாளிகள் பிஎஃப் கணக்கிற்கான தங்களது பங்களிப்பை செலுத்தாவிடில், சந்தாதாரர்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பின் மீதான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
- பிஎஃப் கணக்குகள் மூலம் கிடைக்கும் வட்டி மீதான வரி ஒவ்வொரு வருடமும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் சேமிப்புக்கு மட்டுமே விதிக்கப்படும்.
- புதிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) IT விதிகளில் புதிய பிரிவு 9D ஐ சேர்த்துள்ளது.
- EPF சேமிப்பின் மீதான வரிகளைக் கணக்கிடுவதை எளிதாக்க, தற்போதுள்ள PF கணக்குகளில் இரண்டு தனித்தனி கணக்குகள் உருவாக்கப்படும்.
- ஒரு கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை சேமிப்பு இருக்கும், மற்றொன்று ரூ.2.5 லட்சத்துக்கு மேல் முதலீடுகளைக் கொண்டிருக்கும்.
மேலும் படிக்க
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: மத்திய அரசு!
Share your comments