மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான பிஎஃப் பங்களிப்புக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT)கடந்தாண்டு PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்த விதிமுறைகளை வகுத்தது. அதாவது, வட்டியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, 2021-22ஆம் ஆண்டுக்கு இரண்டு கணக்குகள் நிர்வகிக்கப்படும். இதே நடைமுறை, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பின்பற்றப்படும்.
வரி செலுத்தக்கூடிய பங்களிப்பு மற்றும் வரி செலுத்தாத பங்களிப்பு என பிரிக்கப்படும் போது, வரியை கணக்கிடுவது எளிதாகிவிடுகிறது. இதில் உள்ள 5 முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கிய அம்சங்கள் (Important Features)
- EPF மற்றும் VPF சந்தாதாரர்கள், ஒரு நிதியாண்டில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் PF பங்களிப்பைக் கொண்டந்தால், அவர்களுக்கு இரண்டு கணக்குகள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். இந்த விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.
- அதாவது, PF பங்களிப்பில் ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு குறைவாகவே செலுத்துபவர்களுக்கு ஒரு கணக்கு மட்டுமே நிர்வகிக்கப்படும். அந்த கணக்கின் பங்களிப்பு, வட்டி, திரும்பப் பெறுதல் என அனைத்தும் வரி விலக்கிற்கு உட்பட்டது.
- PF பங்களிப்பில் ஆண்டிற்கு 2.5 லட்சத்திற்கு மேல் வைப்பவர்களுக்கு, கூடுதலாக மற்றொரு PF கணக்கு திறக்கப்படும். இது வரிக்குட்பட்ட கணக்காக இருக்கும்
- இந்தப் பங்களிப்பில் கிடைக்கும் வட்டியானது வரிக்கு உட்பட்டது. இந்த முடிவானது, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் நலத்திட்ட வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும், வரி இல்லாத வருமானத்தை ஈட்டுவதையும் தடுக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதாக வரி நிபுணர்கள் நம்புகின்றனர்.
- வரி செலுத்துவோர், தங்கள் ரிட்டன்களைத் தாக்கல் செய்யும் போது, 2.5 லட்சத்துக்கும் மேலான பங்களிப்பிலிருந்து வரும் ஆண்டு வருமானத்தை தங்கள் பிஎஃப் கணக்கில் சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க
இன்று தங்கப் பத்திரம் வெளியீடு: கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம்!
முதலீட்டின் பலனை பாதிக்கும் கசிவுகள்: கண்டறிந்து மேம்படுத்துவது எப்படி?
Share your comments