1. Blogs

PF: நாமினி நியமனம் செய்யும் எளிய வழிமுறை!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Nominee appointment

இந்தியாவில் PF கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை தேர்வு செய்வது அவசியம். PF பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதனால் பிஎப் கணக்குதாரர் குடும்பத்தில் ஒருவரை நாமினியாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிஎப் கணக்கில் இருந்து கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் (Insurance) மற்றும் பென்ஷன் (Pension) உட்பட எல்லா பலன்களையும் நாமினி தொடந்து பெற முடியும். நாமினியை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி ஆகும். அதற்குள் அனைவரும் ஆன்லைனில் நாமினியை இணைத்து விடுங்கள்.

ஆன்லைனில் நாமினி நியமனம் (Online Nominee Appointment)

ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு செய்து நியமனம் செய்யலாம். நாமினியாக தேர்வு செய்யப்படுபவர்கள் புகைப்படம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், முகவரி ஆகியவை அவசியமாகும். ஆன்லைன் மூலம் நீங்கள் பிஎஃப் கணக்கு நாமினியை தேர்வு செய்யலாம். அதற்கான எளிய வழிமுறைகளை காண்போம்.

நாமினி நியமனம் செய்யும் முறைகள் (Nominee Appointment Methods)

  • EPFO இணையப்பக்கத்தில் epfindia.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • அதில் Service என்ற விருப்பத்தை தேர்வு செய்து, அடுத்ததாக For Employees என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு உங்களுடைய UAN எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு உள்நுழையவும்.
  • அதில் இ-நாமினேஷன் என்ற பிரிவில் குடும்ப விவரங்களை சேர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தகவலை நிரப்ப வேண்டும்.
  • மொத்த பங்கின் தொகையை அறிவிக்க ‘நாமினேஷன் விபரங்கள்’ (Nomination Details) என்பதைக் கிளிக் செய்யவும். பிறகு ‘Save EPF Nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கடைசியாக உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP SEND செய்து அந்த எண்ணை பதிவிட்டு நாமினியை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

BSNL 4G சேவை: சுதந்திர தினத்தில் அறிமுகம்!

PF உறுப்பினர்கள் கவனத்திற்கு: மார்ச் 31 கடைசி நாள்!

English Summary: PF: Nominee appointment simple procedure! Published on: 26 March 2022, 06:12 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.