1. Blogs

குடிப்பழக்கத்துக்கு எதிராக போஸ்டர் அடித்து விழிப்புணர்வு!

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
Poster awareness against drinking

குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு ஓரூ ஆண்டு நிறைவடைந்ததையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் அடித்து கொண்டாடிய முன்னாள் மதுபிரியரின் இச்செயல், வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பல பாராட்டுகளை பெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு வயது 53. கடந்த 32 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இவர், அதை, விடவேண்டும் என்று கடும் உறுதியுடன் முடிவெடுத்தார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, குடிப்பழக்கத்தை கைவிட்ட இவர், ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், போஸ்டர் அடித்து தெருக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அந்த முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் அடிக்க ஒரு உபயதாரரையம் கண்டுபிடித்துள்ளார் மனோகரன். இதுகுறித்து  மனோகரன் கூறுகையில், குடிப்பழக்கத்தால் தனது மரியாதையை, ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்திருந்ததாகக் கூறுகிறார். பேரன் பேத்திகள் கூட குடிப்பதால் சரியாக பேசுவதில்லை என்று மிகுந்த வேதனையுடன் கூறினார் மனோகரன்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினந்தோறும் 300 முதல் 400 ருபாய் செலவிட்டு வந்ததால், வீடு மனை ஒன்றை விற்கும் நிலைக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதால், வீட்டிலும் ஊரிலும் மரியாதை அதிகரித்துள்ளது எனவும் உடல் நலமும் சீராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்தவே, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறினார்‌.

'குடிப்பவர்கள் திருந்தினால் மதுக்கடைகளை அரசாங்கம் தானாகமூடும்' என்ற இவரின் வார்த்தை அனைத்து மதுபிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பது பெருமைக்குரியது.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

  • உயர் இரத்த அழுத்தம்
  • பக்கவாதம்
  • கணைய அழற்சி
  • கல்லீரல் நோய்
  • கல்லீரல் புற்றுநோய்
  • வாய் புற்றுநோய்
  • தலை மற்றும் கழுத்து புற்றுநோய்
  • மார்பக புற்றுநோய்
  • குடல் புற்றுநோய்
  • மனச்சோர்வு
  • டிமென்ஷியா
  • ஆண்மைக் குறைவு அல்லது முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற பாலியல் பிரச்சினைகள்
  • கருவுறாமை
  • மூளைக்கு சேதம், இது சிந்தனை மற்றும் நினைவகம் ஆகியவற்றில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்

உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஆல்கஹால் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் நீண்டகால சமூக தாக்கங்களையும் ஏற்படுத்தும்.

அவை,

  • குடும்ப முறிவு மற்றும் விவாகரத்து
  • உள்நாட்டு துஷ்பிரயோகம்
  • வேலையின்மை
  • வீடற்ற தன்மை
  • பொருளாதார சிக்கல்

இவ்வனைத்து பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்க குடிப்பழக்கத்தை விடுவது சிறந்தது என்று அறிஞர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கிண்றனர்.

மேலும் படிக்க

பிரதமர் சிவமோகா விமான நிலையம் திறப்பு! PM கிசான் உட்பட பல திட்டம் வெளியீடு!

திருப்பதி லட்டு இனி பனை ஓலைப் பெட்டியில் விநியோகம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

English Summary: Poster awareness against drinking geting appreiations on internet Published on: 27 February 2023, 03:57 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.