ஈரோடு மாவட்ட விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள் ஆகியன பரவலாக பயிரிடப் பட்டு வருகின்றன. எனினும் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இங்குள்ள விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அனைத்து வகையான வாழைக் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேந்திரன், கதிலி, ஆந்திரா ரஸ்தாளி, ஜி-9, ரொபஸ்டா, மோரீஸ் போன்ற பழங்கள் அதிக அளவில் பயிரிட்டு கேரள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. மேலும் பழ வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் வாழையின் தேவை அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
வாழை விவசாயிகள் கூறுகையில், வாழையை பொறுத்தவரை அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருவதாலும், எல்லா மாதத்திலும் இதன் தேவை இருப்பதாலும், குறுகிய கால பயிராக இருப்பதாலும் தொடர்ந்து வருமானம் தரும் பயிராக விளங்குவாதால் ஆர்வத்துடன் பயிரிட்டு வருவதாக தெரிவித்தனர்.
Share your comments