1. Blogs

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெற அழைப்பு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Rabi crop for insurance

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெறலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2019 - 20 ஆம் ஆண்டிற்கான ராபி பருவ பட்டத்துக்கு காப்பீடு செய்யாதவர்கள் இம்மாத இறுதிக்குள் காப்பீடு செய்யலாம். விருப்பமுள்ள விவசாயிகள் அருகிலிருக்கும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி மேலும் விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. காப்பீடுக்கான பயிர்கள் மற்றும் பிரீமியம் தொகை போன்ற விவரங்கள் பின்வருமாறு. 

மக்காச்சோளம், நிலக்கடலை

பிப்ரவரி 15

ரூ.335 / ரூ.355

உளுந்து  மற்றும் துவரை

பிப்ரவரி 15

ரூ.236

சோளம் மற்றும் கம்பு

பிப்ரவரி 15

ரூ.99

எள்

பிப்ரவரி 15

ரூ.107

வெண்டை

பிப்ரவரி 15

ரூ.420

வாழை மற்றும் மரவள்ளி

பிப்ரவரி 28

ரூ.2,475 / ரூ.725

நெல்

பிப்ரவரி 29

ரூ.435

கரும்பு

அக்டோபர் 31

ரூ.1,560

 

Crop insurance premium

காப்பீடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பெயரை பதிவு செய்து தங்களை காப்பீடு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளலாம்.
  • பயிர் கடன் பெறாத விவசாயிகள் எனில், அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய வங்கிகளின் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது காப்பீட்டு நிறுவன முகவர்கள் மூலமாகவோ அல்லது வணிக வங்கிகள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் போது, அத்துடன் அதற்கான விண்ணப்ப படிவம், நில பட்டா, அடங்கல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அதற்கான அதிகாரியிடம் கொடுத்து உரிய ரசீது பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Rabi crop insurance 2019- 20: Now Pudukkottai Farmers can enroll their names Published on: 11 February 2020, 12:34 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.