1. Blogs

விருந்தினர்கள் வாடகைக்கு- ரூ.1,500 மொய்யும் உண்டு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 1,500 if guests attend a rental-wedding!

திருமணத்திற்குச் சென்றால், விருந்தினர்கள் தான் மொய் எழுதுவார்கள். ஆனால், திருமணத்தில் கலந்து கொள்வோருக்கு மொய் கொடுக்கும் விசித்திரமான நாடு ஒன்று உள்ளது. அதுதான் தென்கொரியா.

வாழ்நாள் கனவு (Lifelong dream)

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிப்படுவதாக நம்பப்படுகிறது. எனவேத் திருமணம் என்பது தனிமனிதனின் வாழ்நாள் கனவாக இருக்கும்.
இந்தியாவில் இரு மனங்களை ஒன்றிணைப்பதை திருமணம் என்பதை விட, வாழ்நாள் கடமை கல்யாணம் என்ற எண்ணப்போக்கு கொண்டவர்கள் அதிகம்.

மொய்

குழந்தை பிறந்ததில் இருந்தே, அதன் திருமணத்திற்காக சேமிக்கத் தொடங்குவதும் உண்டு. திருமணம் தொடர்பான நமது பாரம்பரிய சடங்குகளுக்கும், பிற நாடுகளில் நடைபெறும் திருமணங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் விருந்தினர்களுக்கு மொய் கொடுக்கும் நடைமுறை.

போலி விருந்தினர் (Fake guest)

தென்கொரியாவில்தான் இந்த போலி விருந்தினர் நடைமுறை உள்ளது. ஏனெனில் தங்கள் வீட்டுத் திருமணத்தில் அதிக மக்கள் கலந்துகொள்வதை மட்டுமேத் தங்களது கவுரவத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர்.

திருமண ஏஜென்சிகள் (Marriage agencies)

அவர்களின் இந்த எண்ணைத்தைக் காசாக்க வேண்டும் எனப்தற்காக பல ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்குத் திருமணம் செய்துக் கொள்பவர்கள், தென் கொரியாவில் பணம் செலுத்த வேண்டும்.
திருமண விருந்தில் அதிகமான விருந்தினர்கள் கல்யாணத்தில் கலந்துக் கொள்வதாக கணக்குக் காட்டுவதற்காக மக்கள் வாடகைக்கு ஆட்களை அழைக்கிறார்கள்.

சிறப்புப் பயிற்சி (Special training)

அந்த விருந்தினர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், நன்றாக அலங்கரித்துக் கொண்டு, திருமண விருந்தில் கலந்து கொள்வதற்காகத் தான்.
அவ்வாறு வரும் விருந்தினர்கள், மிகவும் பண்பாக நடந்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்த ஏஜென்சிகள் சிறப்புப் பயிற்சியும் அ ளிக்கின்றன. திருமணத்தில் கலந்துக் கொள்ளும் அவர்கள், திருமணமாகும் தம்பதிகளின் குடும்பத்தின் மிக நெருங்கிய உறவினர்கள் போல் ஆசையுடனும் பாசத்துடனும் தோற்றம் அளிப்பார்கள்.

சம்பளம் (Salary)

ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ள இந்தப் போலி விருந்தினருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் 1500 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க...

பக்கோடாவுடன் மொறு மொறு பல்லி- பகீர் ரிப்போர்ட்!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Rs 1,500 if guests attend a rental-wedding! Published on: 27 October 2021, 11:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.