1. Blogs

மாதம் ரூ.1,500 போதும்- ரூ.35 லட்சம் வரை வருமானம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 1,500 per month is enough - up to Rs 35 lakh income!

ஓய்வு காலத்திற்கான சேமிப்பு ஒன்றே, வயதான காலத்தில் நாம் மனநிம்மதியுடனும், நிதிப்பிரச்னை இல்லாமலும் வாழ வழி வகுக்கும்.

அஞ்சலக சேமிப்புத் திட்டம் (Postal Savings Plan)

அதற்கு வருமானம் ஈட்ட ஆரம்பித்த காலம் முதலே எதிர்காலத்திற்கான முதலீடாக சேமிப்பையும் செய்ய வேண்டியது அவசியம். இத்தகைய உங்கள் எண்ணத்தை ஈடேற்றிக்கொள்ள காப்பீடு நிறுவனங்கள் நிச்சயம் கைகொடுக்கும்.

அந்தவகையில் காப்பீடு நிறுவனங்களைக் போன்று அஞ்சலகமும் பலவிதமானக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கிராம சுரக்ஷா திட்டமும் ஒன்று.

எதற்கு காப்பீடு (Insurance for what)

காப்பீடு என்பதே, எதிர்பாராத நேரத்தில், ஏற்படும் இழப்புகளின்போது, நம் குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. இப்படிப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் அரசின் திட்டமாக இருந்தால், இன்னும் பாதுகாப்பானது தானே. அதுவும் கூடுதலாக வரிச்சலுகையுடன் கிடைக்கும் என்றால் அதிக சந்தோஷம்.

வயது வரம்பு (Age limit)

இந்திய அஞ்சலகம் மக்களின் நலனுக்காக, கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு (Gram Suraksha or Whole Life Assurance) என்ற திட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும்.

கடன் வசதி (Credit facility)

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். 5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது.

பிரீமியம் (Premium)

இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு.
அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாகும்.
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும். இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.

முதிர்வு தொகை (Maturity amount)

இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.

போனஸ் (Bonus)

தற்போதைய நிலையில் போன்ஸ் விகிதம் வருடத்திற்கு 60,000 ரூபாய் வரைக் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய்க்கு 60 ரூபாய் போனஸ் ஆக கிடைக்கிறது. இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஆக பாலிசிதாரர் இறந்துவிட்டால், சலுகைகள் நாமினிக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க...

லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

English Summary: Rs 1,500 per month is enough - up to Rs 35 lakh income! Published on: 17 November 2021, 10:02 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.