திருமண வயதில் உள்ள இளைஞரா நீங்கள், உங்கள் திருமணத்தை இந்த நாட்டில் செய்துகொண்டால், உங்களுக்கு ரூ.1.70 லட்சத்தைப் பரிசாக அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் கவனத்தைத் தங்கள் நாட்டின் பக்கம் திசைதிருப்பவே இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்வோர் அனைவரும் தங்களது கனவு திருமணத்தை இத்தாலி நாட்டில் செய்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முன்வருவோருக்கு, பெருந்தொகையும் பரிசாக வழங்கப்பட உள்ளத. அதாவது இத்தாலி நாட்டில் உள்ள லாசியோவில் (Lazio)திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு மிகப்பெரிய தொகை காத்திருக்கிறது.
மத்திய இத்தாலியின் அமைந்துள்ள இந்த முக்கிய இடமான லாசியோ பகுதியில், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடக் கலை நினைவு சின்னங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. எனவே, இங்கு திருமணம் செய்ய வருவோருக்கு ரூ.1,67,000 வரை பரிசு தருவதாக அந்நாடு அறிவித்துள்ளது. அதாவது வெளி நாட்டு ஈவெண்ட் நிறுவனங்கள், கேட்டரிங் பூ அலங்காரம் உள்ளிட்ட அதிகப்படியான திருமண செலவுகளுக்கு ரீபண்ட் அளிப்பதாக கூறியுள்ளது.
லாசி வித் லவ் (Lazio with love) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்திற்குச் இத்தாலி அரசு சுமார் 10 மில்லியன் யூரோ அதாவது 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத்திட்டத்தின் வாயிலாக வெளிநாட்டுப் பயணிகள் மூலம் அதிகப்படியான வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உருவாக்கித்தர முயற்சி செய்துள்ளது.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் வருமானங்களை மீண்டும் எழுச்சி பெற வைக்க முடியும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி- அனுஷ்கா உள்ளிட்ட மிகப்பெரிய பிரபலங்கள் பணக்காரர்கள் திருமணங்கள் இத்தாலியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு- குடிமகன்களுக்கு அதிர்ச்சி!
நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!
Share your comments