வங்கிகள் வாயிலாக எளிதில் பணப் பரிமாற்றம் செய்யும் NEFT பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்ககலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.10,000 வரையிலான NEFT வாயிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.50 கட்டணமாக வசூலிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
NEFT பணப்பரிமாற்றம்
வங்கிகளின் வாயிலாகப் பணம் அனுப்புவதை எளிதாக்கும் வகையில், NEFT பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், வங்கிக்குச் சென்று, சலானைப் பூர்த்தி செய்துவிட்டு, நீண்ட வரிசையில் நின்றுப் பணம் அனுப்பும் முறை முடிவுக்கு வந்துள்ளது.
சுலபமான முறை
இந்த NEFT பரிவர்த்தனை மூலம் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே பணம், போய் சேர வேண்டிய நபருக்கு சென்று சேர்ந்துவிடுகிறது. வங்கிகளுக்கு இடையே NEFT பரிவர்த்தனைக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது.
கட்டணம் கிடையாது
இதுவரை வங்கிகளுக்கு இடையேயான NEFT பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் NEFT பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ரூ.25
அந்த வகையில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ரூ.25 வரை கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. எனினும் தற்போதுவரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
சேமிப்பு கணக்கு
ஆன்லைன் NEFT பரிவர்த்தனைகளுக்கு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், NEFT தொடர்பாக வெளியான விவாத கட்டுரையில் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களின் கட்டண வரம்பை பரிந்துரைத்துள்ளது.
கட்டண விபரம்
அதன்படி, ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.50
ரூ.10,000 மற்றும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5
ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.15
ரூ.2 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.25
எனக் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செலவு
இந்த கட்டணங்கள் விவாதத்தில் உள்ளன. இவை இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. NEFT பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வங்கிகளுக்குச் செலவு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments