3 சதவீத வட்டி விகிதத்தில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு, கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
கனவு (Dream)
கானி நிலத்தில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது நம்மில் பலரது கனவு. இந்தக் கனவை நனவாக்கப் பாடுபடுவோருக்கு உதவும் வகையில் அரசும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அரசு அறிவிப்பு (Government Announced)
அந்த வகையில், வீடு கட்டுவோருக்காக ஆந்திர அரசு ஓர் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
இதில், 1983 மற்றும் 2011க்கு இடையில் அரசு வீட்டுத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டுக் கடன்களுக்கு தீர்வு காணப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் தகவல் (Minister Information)
கூட்டத்திற்குப் பின், ஆந்திர போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் அரசு வீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 46 லட்சத்து 61 ஆயிரத்து 737 பேர் பயனடைவார்கள். மேலும், 1983 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 15, 2011 ஆம் ஆண்டு வரை, ஆந்திர வீட்டுவசதி கழகத்தின் கடன் பெற்றவர்களுக்கான ஓ.டி.எஸ்., எனப்படும் ஒரு முறை தீர்வு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காலக்கெடு (Deadline)
கடன் பெற்றவர்கள் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டத் தொகையை செலுத்தி, ஐ.டி.எஸ்.,- ஐ பெறலாம். வருவாய்த் துறை அதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை, நிலத்தைப் பயனாளிகளுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஆந்திர வீட்டுவசதிக் கழகத்தில் கடன் வாங்கி, வீடு கட்டியவர்கள் மற்றும் அதை விற்றவர்கள், அதை வாங்குபவர் நிலத்தை பதிவு செய்து கொள்ளலாம். இது, சலுகை சம்பந்தப்பட்ட நபர் ஏழை மற்றும் சொந்தமாக வீடு இல்லை என்கிற காரணத்தால் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
கோடிகளைக் குவிக்க உதவும் குப்பைகள் (வாழை நார்) - VAP தயாரிப்பு!
நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!
Share your comments