சாலை விபத்தில் (Road Accident) சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்க, பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, உதவி செய்வோரை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
ரூ. 5,000 பரிசு (Rs. 5,000 Cash Price)
சாலை விபத்தில் சிக்கியவர்களை, பொன்னான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவசர கால உதவியை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
ஒரு ஆண்டில் ஒரு நபருக்கு, அதிகபட்சம் ஐந்து முறை பரிசுத்தொகை (Cash Price) வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின், காவல் துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு, விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர்.
பரிந்துரை
அனைத்து விபத்துகளையும், மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும், மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் உதவி செய்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க, போக்குவரத்து துறை கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
ஒரு திருக்குறள் சொன்னால் 1 டாலர் பரிசு: புதுகை இன்ஜினியர் அசத்தல்!
மீண்டும் கிடைக்கிறது சிலிண்டர் மானியம்: பொதுமக்கள் மகிழ்ச்சி!
Share your comments