இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் (Pension) உதவியாக இருக்கும்.
வய வந்தனா யோஜனா!
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் (Pradhan Mantri Vaya Vandana Yojana Project). மற்ற ஃபிக்ஸட் டெபாசிட், பென்சன் திட்டங்களை விட இத்திட்டத்தில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனாலும், வருடாந்திர அடிப்படையில் இத்திட்டத்தில் 7.66 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது.
முதலீடு எவ்வளவு
இத்திட்டத்தில் பயன் பெறும் வாடிக்கையாளர் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.62 லட்சம் முதலீடு (Invest) செய்ய வேண்டும். காலாண்டு ஓய்வூதியத்திற்கு ரூ.1.61 லட்சம், ஆறு மாதங்களுக்கு ரூ.1.59 லட்சம் மற்றும் ஆண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1.56 லட்சம் முதலிடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,250 ஆகும். காலாண்டு ஓய்வூதியம் ரூ.27,750, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.55,500 மற்றும் அதிகபட்ச ஆண்டு ஓய்வூதியம் (Pension) ரூ.1,11,000. இந்தத் திட்டத்தின் கீழ், எந்தவொரு முதலீட்டாளரும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
கடன் வசதி:
2021ஆம் ஆண்டில் நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், 2031ஆம் ஆண்டில் நீங்கள் ஆண்டுதோறும் 7.4 சதவீத நிலையான வருமானத்தைப் பெறலாம். 10 வருட பாலிசி காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர் உயிரோடு இருந்தால், கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த தொகை அவருக்குத் திரும்பக் கிடைக்கும். அதேநேரம், பாலிசி (Policy) காலத்திலேயே பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு முழு முதலீட்டுத் தொகையும் கிடைக்கும். முதலீட்டு காலத்தின் மூன்று ஆண்டுகளில் கடன் (Loan) பெறும் வசதியும் கிடைக்கும். இத்திட்டம் எல்ஐசியின் (LIC) கீழ் செயல்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!
வைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு! நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது!
Share your comments