மாணவிகளுக்கு உயர்கல்வி உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஜூலை மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் என்பதால், அன்று முதல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மாணவிகள் உயர்கல்வியில் தொடர ஏதுவாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்தது. பெற்றோரிடையே பெரும் வரவேற்புப் பெற்ற இந்தத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
மக்கள் எதிர்பார்ப்பு
மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தத் திட்டத்தை ஜூலை 15ம் அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும்.
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிற்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டது.ஆனால் தற்போதைய நிலையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகையை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லுாரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும் உயர்கல்வி துறை பட்டியல் எடுத்து வருகிறது. இந்த திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் துவங்க உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments