லோகோ எனப்படும் சின்னம் அமைக்க 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வித்தியாசமான சின்னம் அமைத்துப் பரிசை வெல்ல, திறமை உள்ளவர்கள் முயற்சி செய்யலாம்.
பசுமை தமிழ்நாடு' இயக்கத்துக்கான, 'லோகோ' எனப்படும் புதிய அடையாள சின்னம் வடிவமைக்கும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, வனத்துறை அறிவித்து உள்ளது.
சின்னம்
அதிகரிப்பதற்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்த, 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' துவக்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பசுமை இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அடையாள சின்னம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடி வாய்ப்பு
இதற்கு, 'டெண்டர்' வாயிலாக தனியார் நிறுவனத்தை அணுகாமல், பொது மக்கள் நேரடியாக பங்கேற்கும் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள், வரைகலை வல்லுனர்கள், சிறப்பான அடையாள சின்னத்தை உருவாக்கி, ஜூலை 18க்குள் அனுப்ப வேண்டும்.
ரூ.50,000 பரிசு
இதில் தேர்ந்தெடுக்கப்படும் அடையாள சின்னத்தை உருவாக்கியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய, அரசு வனத்துறையின் இணையதளத்தை பார்வையிடலாம் என, வனத்துறை அறிவித்துஉள்ளது.
மேலும் படிக்க...
Share your comments