50 வயதில் ஓய்வு பெற விரும்புபவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் திட்டம் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
ஓய்வுகால கவுரவம் (Retirement Honor)
ஓய்வு பெறும்போது, கையில் பெருந் தொகையுடன் இருப்பது, நமக்கு கவுரவத்தை மட்டுமல்ல, நம் பிள்ளைகள் முன்பு தனிக் கவுரவத்தையும் கொடுக்கும். வயதானக் காலத்தில் வீட்டில் உட்கார்ந்துகொண்டு அவர்களிடம் பணம் கேட்கமால், இருக்க விரும்புவோருக்கு எஸ்ஐபி எனப்படும் இந்த திட்டம் சிறந்த சேமிப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.
SIP Investment Plan
உதாரணமாக 50 வயதில் ஓய்வு பெற விரும்பினால் 25 வயதில் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.
இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 60. பொதுவாக ஓய்வு காலத்தை மனத்தில் வைத்து மக்கள் சேமித்து வருகின்றனர். இருப்பினும் தனது வாழ்நாள் முழுவதும் போதுமான அளவு பணத்தை சேமித்து வைத்திருந்தால் ஒருவர் முன்னதாகவே ஓய்வு பெறலாம். அதற்கு முன்கூட்டியே முதலீடு செய்வதைத் தொடங்க வேண்டியது அவசியம். குறைந்தது 25 வயதில் இருந்து சேமிப்பை தொடங்கினால், விரும்பும்போது கையில் பெருந்தொகையுடன் ஓய்வும் பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில், பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும், பெருக்கவும் எஸ்ஐபி (SIP)நல்ல முறையாக கருதப்படுகிறது. எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வது. வழக்கமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்படுகிறது.
தொடர் முதலீடு
குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என குறிப்பிட்ட காலக்கெடுவில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்த முறை வழிவகுக்கிறது. எல்லா வகையான முதலீட்டளார்களுக்கு ஏற்றத் திட்டம் இது. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு சிக்கலானவை என நினைப்பவர்களுக்கு இந்த முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம். தேவை எனில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரலாம்.
25 வயது முதல் (From the age of 25)
உதாரணமாக 50 வயதில் ஓய்வு பெற விரும்பினால் 25 வயதில் முதலீட்டைத் தொடங்க வேண்டும்.50வயதிற்குள் ரூ.10 கோடி சேமிப்பை உருவாக்க விரும்பினால் முன்பேத் திட்டமிட வேண்டும். ஆண்டுக்கு 12 முதல் 15 விழுக்காடு வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையை 10% அதிகரிக்க வேண்டும்.
ரூ.10கோடி (Rs 10 crore)
இதன்படி 50 வயதில் 10 கோடி ரூபாய் சேமிப்பை உருவாக்க வேண்டுமெனில் 25 வயதில் முதல் வருடம் ரூ.26000 முதலீடு செய்ய வேண்டும். தொகை அதிகம் என்றால் தேவைகேற்ப முதலீடு செய்துப் பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
Share your comments