பெற்ற பிள்ளைகள் நன்றியுடன் இருப்பார்கள் என நம்மால் உறுதியாகக் கூறமுடியுமா என்றால், சற்று சந்தேகமே.
ஆனால் பிள்ளைகளோடு நாய் ஒன்றை கொஞ்சம், அக்கறையையும், பாசத்தையும் செலுத்து வளர்த்தால், நிச்சயம் நன்றியுடன் இருக்கும் என்பதற்கு துருக்கியில் நடைபெற்ற சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.
துருக்கியில் தன் எஜமானர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு, அவரது நாய் காத்திருந்த காட்சி வைரலாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி (Admitted to hospital)
துருக்கியின் டிராப்ஸன் பகுதியை சேர்ந்த செமல் செண்டுர்க் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார்.
காத்திருந்த நாய் (The waiting dog)
அப்போது அவரது வளர்ப்பு நாயான போன்குக், ஆம்புலன்சின் பின்னாலேயே ஓடி வந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காண மருத்துவமனையின் வாசலிலேயே செல்ல நாய் காத்திருந்துள்ளது. தன் எஜமானர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை தினமும், வாசலில் செமல் வருகைக்காக காத்திருந்தது. மருத்துவமனை ஊழியர்களும் அந்த நாயை விரட்டாமல், அரவணைத்தனர். சிலர் உணவு கொடுத்தும் உதவினர்.
எஜமானரை பார்க்க ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் காத்திருந்த போன்குக், அவ்வப்போது செய்த சேட்டையை அனைவரும் கண்டு ரசித்தனர்.
எப்போது நாய் செல்லும் ? (When does the dog go?)
ஒவ்வொரு முறையும் மருத்துவமனையின் வாசல் கதவு திறக்கும்போதும் உள்ளே ஏக்கத்துடன் எட்டிப்பார்த்து ஏமாற்றமாக வாசலில் உட்கார்ந்துவிடுமாம். குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு செமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரே அந்த செல்ல நாய் அங்கிருந்து சென்றுள்ளது.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தன் எஜமானரை மனிதநேயத்துடன் மருத்துவமனை வாசலில் ஏங்கி காத்திருந்த செல்ல நாயின் பாசப்போராட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.
மேலும் படிக்க...
டெல்லிக்குள் பிரம்மாண்ட பேரணி- 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்பு!
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!
Share your comments