பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பின் விஷத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
பாம்பு விஷம் பறிமுதல் (Seizure of snake venom)
வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்கு கடத்த முயன்ற 2 கோப்பை நல்ல பாம்பு விஷத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நல்ல பாம்பு விஷம் (Cobra venom)
மோசமான நிலையில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோதெரபி (chemotherapy)அளிக்கப் பயன்படும் வேதிப்பொருட்களில் நல்ல பாம்பின் விஷமும் (நஞ்சும்) கலக்கப்படுகிறது.
சீனாவில் இதனைப் புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்த தொடங்கியதிலிருந்து இதன் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
நல்லபாம்பின் ஒரு கிராம் அளவிலான விஷம் அதிகாரப்பூர்வ சந்தை மதிப்பின் படி தற்போது ரூ.8 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் பகுதியில் 1800 கிராம் எடை கொண்ட பவுடர் வடிவிலான பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விட்டுச்சென்ற பை (Leftover bag)
அம்மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பாம்பு விஷம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது 4 பேர் ஒரு பையுடன் இந்திய எல்லைக்குள் நுழைவது தெரிந்தது. அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைக்க முயன்றனர். இதையடுத்து, கொண்டு வந்த பையைப் கீழே போட்டுவிட்டு அவர்கள் நால்வரும் மீண்டும் வங்கதேச எல்லைக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த பைகளில் இரண்டு கிறிஸ்டல் குடுவைகள் இருந்தன. அதில் ஒன்றில் நல்ல பாம்பின் ஆங்கில சொல்லான கோப்ரா என்றும் ரெட் டிராகன் பிரான்ஸ் தயாரிப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த பவுடரும் சிகப்பு வண்ணத்தில் இருந்தன.
இது பற்றி மாவட்ட வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை நல்ல பாம்பின் விஷம் என உறுதி செய்தனர். கள்ளச்சந்தையில் அதன் மதிப்பு ரூ.24 கோடி என குறிப்பிட்டனர். இதனை இந்தியாவிற்கு கடத்தி, இங்கிருந்து சீனாவுக்கு கொண்டு செல்வது திட்டமாக இருந்திருக்கும் என கூறுகின்றனர்.
மேலும் படிக்க...
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
Share your comments