1. Blogs

பூமியைத் தாக்கும் சூரிய புயல்: விண்வெளி ஆய்வு மையம் எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Solar storm to hit Earth

சூரியனில் இருந்து வெளியேறும் மிக பிரம்மாண்டமான புவிகாந்த புயல் இன்று பூமியை தாக்கும் என, உலகம் முழுதும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சூரியனின் கருந்துகள் பரப்பில் உருவாகும் பிரமாண்ட வெப்ப புயல், பூமி மற்றும் இதர கோள்களை நோக்கி கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இது, புவிகாந்த புயலாக மாறி பூமியை தாக்கும்.

புவிகாந்த புயல் (Geomagnetic storm)

புவிகாந்த புயல் இன்று பூமியை தாக்கக்கூடும் என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' (NASA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சி.இ.எஸ்.எஸ்.ஐ., எனப்படும் இந்திய விண்வெளி சிறப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் இந்த புவிகாந்த புயல் வினாடிக்கு, 429 - 575 கி.மீ., வேகத்தில் பயணித்து பூமியை இன்று தாக்க அதிக வாய்ப்புள்ளது. இது, மின் தொகுதிகளை பாதிக்கும். இதனால், உலகின் பல்வேறு பகுதிகளில் மின் சேவை துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, உயரமான மலைப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புவிகாந்த புயல்களின் வேகத்தை, 'ஜி - 1' முதல் 'ஜி - 5' வரை விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர்.

இதில், ஜி - 1 வகை புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. இன்று தாக்கவுள்ள சூரியப் புயலின் வேகம் ஜி - 2 வகையைச் சார்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

புதிய மின் இணைப்பு தேவையெனில் உயிர்காக்கும் கருவி கட்டாயம்!

72 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் அதிகபட்ச வெயில்!

English Summary: Solar storm to hit Earth: Space Research Center warning! Published on: 14 April 2022, 02:03 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.