ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4G வசதிக்கொண்ட புதிய ஜியோ பாரத் போனை (Jio Bharat Phone) வெறும் ரூ.999-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்றளவும் 2G சேவையினை பயன்படுத்தி வரும் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இணைய உலகில் புதிய மாற்றத்தை அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் சேவைகள், குறிப்பாக அதிக விலைக்கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களுக்கு நடப்பு காலத்து இணைய வசதியை அளிக்கும் நோக்கத்துடன் RJio ஜியோ பாரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jio Bharat Phone-ல் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
ஜியோ பாரத் போன் 1.77 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளேவுடன் (display) வருகிறது. HD அழைப்பு, Jio Money ஐப் பயன்படுத்தி UPI கட்டணம், ஜியோ சினிமா போன்ற OTT சேவைகளுக்கான அணுகலையும் ஆதரிக்கிறது. தொலைபேசியில் நீக்கக்கூடிய 1000 mah பேட்டரி (removable battery) பொருத்தப்பட்டுள்ளது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரம் வரை நீடிக்கும். இயர் போன்களை இணைக்க 3.5 மி.மீ ஆடியோ ஃபோன் ஜாக், புகைப்படம் எடுக்கும் வகையில் 0.3 எம்பி கேமரா, டார்ச், எஃப்எம் ரேடியோ மற்றும் மெமரி கார்ட் வசதியும் உள்ளது. SD கார்டுகள் வழியாக 128 ஜிபி வரை சேமிப்பை அதிகரிக்கலாம்.
நாம் கடந்த காலத்தில் பார்த்த மற்ற ஜியோ ஃபோன்களைப் போலவே, ஜியோ பாரத் போனும் ஒரு ஜியோ சிம் லாக் செய்யப்பட்ட ஃபோன் ஆகும், அதாவது நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் ஜியோ சிம் கார்டைச் செருக வேண்டும். இந்த போனை பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் 23 இந்திய மொழிகள் உள்ளது. தற்போது இரண்டு மாடல்களில் வருகிறது- Jio Bharat V2 மற்றும் Jio Bharat K1 Karbonn.
Jio Bharat V2 என்பது நிறுவனத்தின் உள்-கட்டமைக்கப்பட்ட தொலைபேசியாகும், அதே நேரத்தில் K1 Karbonn ஆனது டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட கார்பன் என்ற நிறுவனத்தால் ஜியோ பாரத் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜியோ பாரத் ஃபோனின் முக்கிய அம்சங்களில் ஒன்று 4G VoLTE-க்கான வசதி உள்ளது. பயனர்கள் ஜியோவின் விரிவான 4G நெட்வொர்க் மூலம் தெளிவான குரல் அழைப்புகளை செய்ய இயலும்.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை:
ஜியோ பாரத் தொலைபேசியின் விலை ரூ.999 ஆகும். 4G சேவைக் கொண்ட போன்களில் மலிவான விலையில் கிடைக்கும் போனாக ஜியோ பாரத் உருவாகியுள்ளது. ஜூலை 7 முதல் இந்தியாவில் உள்ள 6,500 தாலுகாக்களில் 1 மில்லியன் ஜியோ பாரத் போன்களுக்கான பீட்டா சோதனைகளை ஜியோ தொடங்க உள்ளது.
எப்படி வாங்குவது:
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள், ஜியோ சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற சில்லறை போன் விற்பனை நிலையங்களுக்குச் சென்று ஜியோ பாரத் தொலைபேசியை வாங்கலாம்.
ஜியோ பாரத் போன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது. இந்த திட்டங்களில் குரல் அழைப்புகள், டேட்டா பலன்கள் மற்றும் ஜியோவின் பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
12 மாவட்டங்களில் கனமழை- அதில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Share your comments