தமிழகத்தில் வேளாண் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் காய்கறி உற்பத்தியை பெருக்கி, தன்னிறைவு அடைவதே ஆகும்.
கொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான காய்கறிகள், பழங்கள் போன்றவை விற்பனை செய்ய இயலாமல் தேங்கும் நிலை உருவானது. தமிழகத்தை பொருத்தவரை அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். தடை உத்தரவை அடுத்து உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழங்களை நம்பி இருக்கும் நிலை உருவானது.
தோட்டக்கலை துறை முயற்சி
தமிழகத்தில் குறைந்த அளவிலான பரப்பளவில் மட்டுமே காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி ஆவதால் அதனை உயர்த்தும் நோக்கில் தேசிய வேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலக்கு நிர்ணயக்க பட்டுள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்களிலும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தி, வாய்ப்புள்ள விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட வேண்டும் என வேளான் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி மற்றும் தோட்டக்கலை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இதன்படி விவசாயிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெண்டை, கத்திரி, பச்சை மிளகாய, அவரை உள்ளிட்ட காய்கறி விதைகள் வழங்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.
Daisy Rose Mary
Krishi Jagran
Share your comments