Krishi Jagran Tamil
Menu Close Menu

காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை

Thursday, 23 April 2020 05:22 PM , by: Anitha Jegadeesan
seedling Tray

தோட்டக்கலை துறையின் சார்பில் குறைந்த விலையில் காய்கறி நாற்றுக்களை விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுதும் உள்ள 80 தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணைகளில், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி துவங்கியுள்ளது.

கரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் காய்கறி அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே புதிதாக காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்வதன் மூலம், எதிர்கால தேவையை சமாளிக்க இயலும்.

தோட்டக்கலை துறை பண்ணைகளில் புதிய காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசு ரூ.10 கோடியை, வேளாண் துறை செயலர் மற்றும் தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆகியோரிடம் அளித்துள்ளது. மாவட்டம் தோறும் உள்ள தோட்டக்கலை துறை பண்ணைகளில் 23 கோடி காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அரசின் நிதியை பயன்படுத்தி, தினமும் பயன்படுத்தும் காய்கறிகளான தக்காளி, வெங்காயம், கத்தரி, மிளகாய், வெண்டை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஒரு நாற்று, ரூ.1க்கு, என்று விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Seedling Production in Trays Tamil Nadu Horticulture Department Gagandeep Singh Bedi
English Summary: State Government Nurseries Going To Increase Seedling Tray for Upcoming Shortfall

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும்! புதிய சட்டம் இயற்ற விவசாயிகள் கோரிக்கை!
  2. பயிர்களைப் பாதுகாக்கும் வகையில், வனவிலங்குகளை விரட்ட மருந்து கண்டுபிடிப்பு!
  3. புரெவி புயலால் நாளை பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!
  4. புரெவி புயலில் இருந்து பயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! தோட்டக்கலை துறை ஆலோசனை!
  5. Google pay, Phonepe உள்ளிட்ட மொபைல் ஆப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களா நீங்கள்...? இனி கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் - எச்சரிக்கை!!
  6. மானிய விலையில் விதை 'பாக்கெட்' - காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்!!
  7. நல்ல சுவையான கிறிஸ்துமஸ் கேக்..! வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க..!!
  8. பிரபல இந்திய நிறுவனங்களின் தேனில் சீனச் சர்க்கரைப்பாகு கலப்படம்- ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!
  9. 3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!
  10. ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.