ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மெக்கானிக்கல் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியர், சிவில் இன்ஜினியர் மற்றும் இதர பணியிடங்கள் என 276 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் வாய்ந்த நபர்கள் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் குறித்த முக்கியத் தகவல்கள் பின்வருமாறு-
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் B.E./B.Tech/ MBA/PGDM/ M/Sc./ M.B.B.S. பிரிவுகளில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (பணியிடத்திற்கு ஏற்றவாறு கல்வித்தகுதி/ பாடப்பிரிவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பதாரர்களின் வயது:
குறைந்தப் பட்சம் 25 வயது முதல் 50-க்குள் இருக்க வேண்டும். (அரசு இட ஒதுக்கீடு விதிகளின்படி ஒரு சில பிரிவினருக்கு வயது தளர்வு பொருந்தும்). இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசித்தேதி: 18 செப்டம்பர் 2023. அட்மிட் கார்டு, மற்றும் தேர்வு நடைப்பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இப்பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளமே 50,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பத்தாரர்கள் மூன்று கட்ட தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவற்றின் விவரம்-
- கணினி அடிப்படையிலான தேர்வு- CBT : பொதுத் திறன் மற்றும் தொழில்நுட்பம் / தொழில்முறை அறிவு என இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய கேள்விகளைக் கொண்டிருக்கும்.
- குழுப் பணி (Group Task) – விண்ணப்பத்தாரர்கள் குழுப் பணியில் பங்கேற்க வேண்டும். இந்த நிலை அவர்களின் தொடர்பு திறன், குழுப்பணி, சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் தலைமைத்துவ குணங்கள் மதிப்பிடப்படும்.
- தனிப்பட்ட நேர்காணல்- முந்தைய சுற்றுகளில் இருந்து தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பொதுவாக தனிப்பட்ட நேர்காணலை எதிர்கொள்வார்கள். மூட் கோர்ட் (சட்ட அதிகாரிகள் மற்றும் சட்ட அதிகாரிகளுக்கு மட்டும்- HR)
விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST & PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- UR, OBCNC மற்றும் EWS விண்ணப்பதாரர்கள்- ₹1180/- செலுத்த வேண்டும்.(ஜிஎஸ்டி உட்பட)
HPCL காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை:
படி 1- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) அதிகாரப்பூர்வ இணையதளமான www.hindustanpetroleum.com ஐப் பார்வையிடவும்.
படி 2- முகப்புப் பக்கத்தில், திரையின் மேல் பக்கத்தில் தோன்றும் "கேரியர்ஸ்" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3- புதிய பக்கம் தோன்றும், “மெக்கானிக்கல் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியர், சிவில் இன்ஜினியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4- "விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்" என்பதனை கிளிக் செய்க
படி 5- விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
படி 6- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 7- படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்த்து, இறுதியாக "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 8- எதிர்கால பயன்பாட்டிற்காக HPCL ஆட்சேர்ப்பு 2023- (நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை) பதிவிறக்கி சேமிக்கவும்.
காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள் என்பதற்கிணங்க, புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். மேற்படி இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழுத்தகவலை தெரிந்துக்கொள்ள கீழ்க்காணும் லிங்கினை தொடரவும்.
மேலும் காண்க:
சிவகாசியில் கொட்டித்தீர்த்த கனமழை- சென்னைக்கும் எச்சரிக்கை
Chandrayaan 3: அந்த கடைசி 20 நிமிஷம் தான் ரொம்ப முக்கியம்- ஏன்?
Share your comments