பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்த அற்புதமான திட்டமே அம்மா ஸ்கூட்டர் திட்டம். இத்திட்டத்தில் பல பெண்கள் பயன்பெற்று வந்த நிலையில் இதன் மானிய இலக்கு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், பணிபுரியும் பெண்கள் இருசக்கர வாகனங்களை (Two Wheeler) வாங்க, 50 சதவீத மானியம் (Subsidy) வழங்கும் திட்டம் செயல்படுகிறது.
50% மானியம்:
இருசக்கர வாகனத் திட்டத்தின் படி, 125 சி.சி.,க்கு மிகாமல் உள்ள இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் என, எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் சக்கரங்கள் உடைய வாகனத்திற்கு, அதிகபட்சமாக, 31 ஆயிரத்து, 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 9,519 பெண்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2019 - 20 நிதியாண்டில், 6,062 பெண்களுக்கு மட்டுமே, அம்மா ஸ்கூட்டர் மானியம் (Amma Scooter Subsidy) வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர், ஸ்கூட்டர் மானியத்திற்கு (Scooter Subsidy) விண்ணப்பிக்கலாம். அதன்படி, மூன்று நிதியாண்டுகளாக, 9,519 பேருக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு முதல், மானிய இலக்கு குறைக்கப்பட்டு (Subsidy Target Reduced) உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில், 4,000 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குறைந்த விலையில் அடுக்குமாடி வீடு வழங்கும் திட்டம்! 1.50 இலட்சம் மானியம்!
வங்கியில் சேமிப்பவரா நீங்கள்? ஃபிக்ஸட் டெபாசிட்டில் இலாபம்! வட்டி விகிதத்தை அதிகரித்தது கனரா வங்கி!
Share your comments