ஸ்வராஜ் டிராக்டர்ஸ் NASC வளாகத்தில் உள்ள A.P. சிண்டே சிம்போசியம் ஹாலில் ஒரு விருது விழாவை ஏற்பாடு செய்தது. இவ் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். விவசாயத் துறையில் தொடர்ந்து பங்காற்றி, மாற்றத்தை ஏற்படுத்தியவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
‘பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் விவசாயத்தில் தொழில்நுட்பத் தலையீடுகள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து இந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
விருந்தினராக வருகை தந்த நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி பேசவும், இந்திய விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
ஸ்வராஜ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் சவான் தனது சிறப்புரையின் போது, “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கியமானது மற்றும் இயந்திரமயமாக்கலின் பங்கு மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதில் அக்ரிடெக் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் தெரிவித்தார். கூடுதலாக ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க, இந்திய விவசாயத் துறையை ஆத்மநிர்பர் ஆக மாற்றுவதற்கு, இந்திய விவசாய நிலங்களில் நிலையான, மலிவு மற்றும் அணுகக்கூடிய விவசாய இயந்திரமயமாக்கலை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சவான் மேலும் கூறுகையில், “ஸ்வராஜ் டிராக்டர்களில், ‘விவசாயம் மற்றும் வாழ்க்கையை வளமாக்குதல்’ என்ற எங்கள் நோக்கத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மேலும் ஸ்வராஜ் விருதுகள் சாதனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், துறையின் தேவைகள் மற்றும் கவலைகளை விவாதிக்கவும் முன்னிலைப்படுத்தவும் ஒரு தளமாக செயல்படுகிறது. விவசாயிகள் மற்றும் அவர்களது சமூகங்களை நேரடியாகச் சென்றடைவதற்கான வாய்ப்பையும், இது வழங்குகிறது.
சிறந்த KVK, சிறந்த FPO, சிறந்த விஞ்ஞானி, சிறந்த நிறுவனங்கள், சிறந்த விவசாயிகள் கூட்டுறவு, சிறந்த புதுமையான விவசாயிகள் மற்றும் சிறந்த மாநிலம்/UT ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் விருதுகள் விநியோகிக்கப்பட்டன.
‘பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் விவசாயத்தில் தொழில்நுட்பத் தலையீடுகள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க:
இன்று முதல் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்தார் CM Stalin!
தோட்டக்கலை சார்பாக 30 நாட்கள் பயிற்சி- போக்குவரத்து செலவும் அரசே ஏற்கும்!!
Share your comments