1. Blogs

சாகுபடி பரப்பு அதிகரிக்க நிதி ஒதுக்கீடு: அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அறிமுகம்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Nursery Plants are waiting to distribute

தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இவ்வாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்காக ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கும் தோட்டக்கலை துறையினர் ஆலோசனை நடத்தினர்.

மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பழ மரங்களை சாகுபடி செய்து  ஊடுபயிராகவும், குறுகியகால பயிராகிய காய்கறிகளை சாகுபடி செய்வதற்கு அறிவுறுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் நிரந்தர வருவாய் கிடைக்கும் என்கிறார்கள்.

Fruits cultivation

பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிப்பதன் மூலம் அத்துடன் தொடர்புடைய பழங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபடலாம். விரைவில் கெட்டு போகும் பழங்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் மூலம் இழப்பீடுகளை குறைத்து கூடுதல் வருவாய் பெற இயலும். இதற்காக, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கு மாநில தோட்டக்கலை துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியினை உயர்த்துவதன் மூலம்  தன்னிறைவு அடைய முடியம். இத்திட்டம் சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் அரசு தோட்டக்கலைப் பண்ணை வாயிலாக விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் மண் வளம்,  தட்ப வெப்பத்திற்கு ஏற்ப முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

English Summary: Tamilnadu Horticulture Department plans to work on Fruit and vegetables crop Published on: 12 February 2020, 12:11 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.