பொதுவாக பூமி பூஜையின்போது, பால், நெல், தயிர், மற்றும் நவதானியங்களைக் கொண்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஆனால் சற்று வித்தியாசமாக ராஜஸ்தானில் நடைபெற்ற கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், மொத்தம் 11 ஆயிரம் லிட்டர் பால், நெய் மற்றும் தயிர் ஊற்றப்பட்டு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலவார் மாவட்டத்தின் ரட்லை பகுதியில் (Ratlai region of Jhalawar district ) தேவ்நாராயணன் கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமிப் பூஜை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் (Gujjar) சமூகத்தைச் சேர்ந்த மக்கள், 11 ஆயிரம் லிட்டர் பால், பசு நெய் மற்றும் தயிரை ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதாவது1,500 லிட்டர் தயிரும், ஒரு குவிண்டால் நெய்யும் அடக்கம். இதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர்.
இத்தகைய பூஜைகள் மூலம் பால்(Milk), தயிர்(Curd) மற்றும் பசு நெய் ( Desi Ghee)வீணாக்கப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் ராம்லால் குஜ்ஜார் கூறுகையில், குஜ்ஜார் சமூகத்தில் அடிக்கல் பூஜையின்போது, தங்கள் கால்நடைகளின் காணிக்கையாக பால், தயிர், நெய் ஆகியவற்றை பெருமளவில் செலுத்துவது வழக்கம். இவ்வாறு செய்தவன் மூலம் தங்கள் கால்நடைகளை நோய்நொடி இன்றி தேவ்நாராயணன் காப்பார் என்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கை என்றார்.
மேலும் படிக்க...
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
Share your comments