1. கால்நடை

MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 1 lakh grant to set up shed under MGNREGA scheme - How to apply?

Credit : IndiaMART

ஆடு,மாடு வளர்ப்போர்ரை ஊக்குவிக்கும் விதமாக ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், கொட்டகை கட்ட நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act )கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் த்திட்டமானது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தகுதி (Qualifications)

 • பயனாளிகள் கண்டிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்திருக்கவேண்டும்.

 • அதுமட்டுமல்லாமல் குறைந்தது 10ஆடுகள் அல்லது 2 மாடு இருக்க வேண்டும்.

 • கொட்டகைக் கட்டுவதற்கான நிலம் பயனாளிகளின் பெயரில் இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

 • ஆதார் அட்டை 

 • ரேஷன் கார்டு

 •  வாக்காளர் அடையாள அட்டை

 • ஆகியவற்றை இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

உங்கள் பகுதி கால்நடை மருத்துவரிடம் அல்லது ஊராட்சி செயலாளரிடம் தொடர்பு கொண்டு, இந்த திட்டத்தினைப் பற்றியக் கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். 

ஒரே முதலீட்டில் மாதந்தோறும் ரூ.4000/- பென்சன் பெற்றிடுங்கள்!

மானியம் எவ்வளவு? (Subsidy)

 • 2 மாடுகள் வைத்திருந்தால் ரூ.53,425 வழங்கப்படும்

 • 5 மாடுகள் வைத்திருந்தால் ரூ. 81,580 வழங்கப்படும்

 • 10ஆடுகள் வைத்திருந்தால் ரூ.1லட்சத்து 2135 வழங்கப்படும்

 •  20ஆடுகள் எனில் 1லட்சத்து 40,520ரூபாய் வழங்கப்படும்

ஓர் ஆண்டுக்கு பஞ்சாயத்து வாரியாக 3000பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக விண்ணப்பியுங்கள்.

மேலும் படிக்க...

10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!

புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு

மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!

English Summary: Rs 1 lakh grant to set up shed under MGNREGA scheme - How to apply?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.