Krishi Jagran Tamil
Menu Close Menu

சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

Friday, 01 May 2020 02:01 PM , by: Anitha Jegadeesan
Ethottam will extend to other cities

ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்குவதில் சிரமம் நிலவி வந்தது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்வது சற்று சவாலாகவே இருந்தது. இதற்காக  தோட்டக்கலைத்துறை ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனையை தொடங்கியது. மக்களிடையே கிடைத்த வரவேற்பிணை அடுத்து   இத்திட்டம் பிற மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வேளாண் துறை அனுமதியுடன் சென்னையில் ethottam  https://apkpure.com/ethottam/io.ionic.ethottam என்ற, வெப்சைட் வாயிலாக ஆன்லைனில் முதன் முதலாக, காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடங்கபட்டது. இதற்காக சென்னையின் முக்கிய பகுதிகளில்   விற்பனை கிடங்குகள் அமைக்கப்பட்டு தினமும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் இணையதளம் வாயிலாக தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை ஒரு நாளைக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகிறார்கள். தரம் மற்றும் விலை ஆகிய இரண்டும் நியாயமாக இருப்பதால் இந்த திட்டம், பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் கையாள்வதால் இன்று பலருடைய தேவையை பூர்த்தி செய்து வெற்றி கண்டுள்ளது.    

சோதனை முயற்சியாக தொடங்கிய இத்திட்டம், வெற்றி பெற்றதை அடுத்து முதல் கட்டமாக மதுரை, சேலம், கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் உள்ள, முக்கிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. அத்துடன் முன்பதிவு செய்த, மூன்று மணி நேரத்தில் பொருட்கள் வாடிக்கையாளரை சென்றடைய  திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையினரின் இம்முயற்சி வரவேற்க தக்கது.  

Online Shopping Online Trading TN Agriculture Department Ethottam App Online Vegetable Shop
English Summary: The Agriculture Department Has Extended Ethottam App To The Other Major Cities After The Sucessful Trail

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
  2. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
  3. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
  4. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
  5. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
  7. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
  8. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
  9. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
  10. PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.