மூத்த குடிமக்கள், தங்களின் தினசரி தேவைக்கு, 'பிக்சட் டிபாசிட்' (Fixed Deposite) வட்டி வருமானத்தை தான் நம்பி உள்ளனர். பெரும்பாலான வங்கிகள், பிக்சட் டிபாசிட்டுகளுக்கு, 5 முதல் 5.5 சதவீத வட்டியே தருகின்றன.
இது, பண வீக்க விகிதத்தை விடக் குறைவாக இருக்கிறது என்பதால், வருமானம் 'நெகட்டிவ்' ஆகவே இருக்கிறது.மேலும் இந்த வருமானத்திற்கு, அவரவர் அடிப்படை வரம்புக்கேற்ப, 5, 20, 30 சதவீதம் என வரி வேறு. இந்த வரி, வருமானத்தை மேலும் குறைத்து விடுகிறது. பிக்சட் டிபாசிட்டில் முதலீடு செய்பவர்களின் நோக்கம், நிலையான வருமானம் மற்றும் குறைவான 'ரிஸ்க்' என்பதாக உள்ளது.
புளோட்டர் பண்டு
5 லட்சம் ரூபாய் வரை தான், பிக்சட் டிபாசிட் தொகைக்கு உத்தரவாதம் கிடைக்கும். எனவே, 'வரி கட்டிய பின், அதை விட அதிக வருமானம் கொண்டதாக, 'புளோட்டர் பண்டு' என்ற ஒரு திட்டம் இருக்கிறது' என, எஸ்.பி.ஐ., தெரிவிக்கிறது. இது, 'மியூச்சுவல் பண்ட்' திட்டத்தின் நிலையான வருமானம் தரும் 'யூனிட்'களாகக் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், திரட்டப்படும் நிதியில், 65 சதவீதத்தை, மாறுபடும் வட்டி தரும் ஆவணங்களில் வங்கிகள் முதலீடு செய்கின்றன. எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும், இந்த யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம்.'ஓப்பன் எண்டட் பண்டு' என இதற்குப் பெயர்; 'புளோட்டிங் ரேட் டெப்ட் பண்டு' என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் கிடைக்கும் வட்டி, ஏற்ற இறக்கத்துடன், மாறுபடும் தன்மை கொண்டதால், ஓரளவு நல்ல வருமானத்தைக் கொடுத்தபடி இருக்கும்.பல ஆவணங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், 'ரிஸ்க்'கும் குறைவே.இந்த திட்டத்தில் முதலீடு செய்து, மூன்றாண்டுளுக்குப் பின் விற்கும் பட்சத்தில், பண வீக்க விகிதத்திற்கு ஏற்றவாறு வருமானம் சரிகட்டப்பட்டு, அதை அடிப்படையாக வைத்து 20 சதவீத வரி கட்டினால் போதும். இதில் ஆண்டுக்கு 8 சதவீத வருமானத்தை எடுக்கலாம்.
மூன்றாண்டில், 24 சதவீத வருமானம் கிடைக்கும். பிக்சட் டிபாசிட்டில் மூன்று ஆண்டுகளில், பண வீக்க விகித சரிகட்டல் கிடையாது. நிறைய வரி கட்ட வேண்டி இருக்கும். வட்டி விகித ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க, 'புளோட்டிங் ரேட் பண்டு' அல்லது 'ஆல் சீசன்ஸ் பாண்டு பண்டு'களில் முதலீடு செய்து, பிக்சட் டிபாசிட்டை விட, வரிக்குப் பிந்தைய நிலையில் அதிக வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது குறித்து சந்தேகங்கள் இருந்தால், வங்கிகளில் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
மேலும் படிக்க
ஓய்வூதியர்களுக்கு சூப்பர் நியூஸ்: SBI வழங்கிய புதிய வசதி!
LIC-யின் இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை!
Share your comments